போராட்டம் திரைப்படம் ஈழத்து திரையுலகின் அடுத்த கட்டம்; ரசிகர்கள் வரவேற்பு
போராட்டம் திரைப்படத்தின் சிறப்பு திரையிடலை பார்த்த வவுனியா ரசிகர்கள் தங்களது கருத்துக்களை பகிர்ந்துள்ளனர்.
போராட்டம் திரைப்படம்
தொழிலதிபர் பாஸ்கரன் கந்தையா வழங்கும் ‘போராட்டம்’ திரைப்படத்தின் சிறப்பு திரையிடல் வவுனியாவில் உள்ள வசந்த் திரையரங்கில் பிரமாண்டமாக நடைபெற்றது.

ராஜ் சிவராஜ் இயக்கத்தில் உருவான இந்த படத்தில், ரீகன் கந்தையா மற்றும் நிவேதிகா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர் . இசையமைப்பாளர் பூவன் மதீசன் இசையமைத்துள்ளார்.
இந்த படம் அக்டோபர் 2 ஆம் திகதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
வவுனியாவில் போராட்டம் திரைப்படத்தின் சிறப்பு காட்சியினை பார்த்த அனைவரும், படம் எதிர்பார்த்தை விட சிறப்பாக வந்துள்ளதாகவும், இந்திய திரைப்படங்களுக்கு இணையாக உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
மேலும், திரைக்கதைம், இயக்கம், நடிப்பு, இசை, ஒளிப்பதிவு என அனைத்தும் சிறப்பாக உள்ளதாகவும், கால்பந்தை மையப்படுத்தி படத்தை எடுத்திருந்தாலும், இன்றைய இளைய தலைமுறையின் வாழ்வை சீரழிக்கும் போதைப்பொருள் பயன்பாடு குறித்தும் இயக்குநர் சிறப்பாக காட்சிப்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
ஈழத்து சினிமாவில் இப்படி ஒரு தரமான படத்தை உருவாக்கியதற்காக தயாரிப்பாளர் பாஸ்கரன் கந்தையாவிற்கு, பாராட்டுகளையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ள பார்வையாளர்கள், அனைவரும் இந்த திரைப்படத்தை கட்டாயம் திரையரங்கில் பார்க்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.