ஆபாச பட நடிகை மியா காலிஃபா பிரபல நாட்டின் அதிபருக்கு பதிலடி
நடிகை மியா மியா காலிஃபா, தன்னை அமெரிக்க கைக்கூலி என குற்றம் சாட்டிய கியூபா நாட்டின் அதிபருக்கு பதிலடி கொடுத்துள்ளார்.
முன்னாள் ஆபாச திரைப்பட நடிகையும், வெப்கேம் மாடலுமான மியா கலீஃபா (Mia Khalifa) கியூபாவில் நடந்து வரும் ஆர்ப்பாட்டங்களை ஆதரிக்கும் பிரபலமான முகங்களில் ஒருவராக உள்ளார்.
சமீபத்திய நாட்களில், கியூப அரசாங்கத்தையும் தலைமையையும் அவர் கண்டித்து, விமர்சித்து வருகிறார்.
இந்த நிலையில், கியூபாவின் ஜனாதிபதி மிகுவல் டயஸ்-கேனல் (Miguel Diaz-Canel), கலீஃபா அமெரிக்க அரசாங்கத்தின் கைக்கூலியாக பணியாற்றி வருவதாக பகிரங்கமாக குற்றம் சாட்டினார்.
ஆனால், நடிகை கலீஃபா இந்த குற்றச்சாட்டை மறுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
கலீஃபா அந்த ட்வீட்டில் கூறியதாவது:- உங்கள் மக்கள் மீதான உங்கள் மனிதாபிமானமற்ற தன்மை குறித்த விழிப்புணர்வையே பரப்பிவருகிறேன். இதை செய்வதற்காக எந்தவொரு அரசாங்கமும் எனக்கு பணம் கொடுக்கவில்லை. நான் அதை இலவசமாகவும், சுயமாகவும் செய்கிறேன். எனக்கு யாரும் ஸ்பான்சர் பண்ணவில்லை என குறிப்பிட்டுள்ளார்.
அதே நாளில், கியூபாவில் நடக்கும் போராட்டங்களுக்கு அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் ஆதரவு தெரிவித்திருந்தார்.
Oy, singao… I’m not being paid by any government to spread awareness of your inhumanity towards your people. I do it for free and on my own time. @DiazCanelB #notsponsored
— Mia K. (@miakhalifa) July 12, 2021