ரொனால்டோ ரசிகர்கள் அதிர்ச்சி: போர்த்துகலை 0-0 என டிரா செய்த கொலம்பியா
போர்த்துகல் மற்றும் கொலம்பியா அணிகள் மோதிய FIFA உலகக்கிண்ணப் போட்டி டிராவில் முடிந்தது.
இறுதிவரை ஒரு கோல் விழவில்லை
மியாமி மைதானத்தில் நடந்த FIFA உலகக்கிண்ணப் போட்டியில் போர்த்துகல், கொலம்பியா அணிகள் மோதின.
இரு அணிகளும் சமபலத்துடன் மோதியதால் இறுதிவரை ஒரு கோல் கூட விழவில்லை. கொலம்பியாவின் சான்செஸ் அடித்த கோலும் ஆஃப்சைடு என்று அறிவிக்கப்பட்டது.
இதனால் போட்டி 0-0 என டிராவில் முடிந்தாலும், இரு அணிகளும் நாக்-அவுட் சுற்றுக்குள் நுழைந்தன.
ரொனால்டோ கோல் இல்லை
போர்த்துகல் நட்சத்திரம் கிறிஸ்டியானோ ரொனால்டோ (Cristiano Ronaldo) கோல் அடிக்காததும், அணி வெற்றி பெறாததும் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
ஜூலை 3ஆம் திகதி நடைபெற உள்ள போட்டியில் குரோஷியா அணியை போர்த்துகல் எதிர்கொள்ள உள்ளது.
அதேபோல் ஜூலை 4ஆம் திகதி ரவுண்ட் ஆஃப் 32 போட்டியில் கானா அணியை கொலம்பியா எதிர்கொள்கிறது.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |