ரொனால்டோவுக்கு அதிர்ச்சி கொடுத்த டிஆர் காங்கோ: ஃபிபா உலகக்கிண்ணத்தில் ரசிகர்கள் ஏமாற்றம்
போர்த்துகல், டிஆர் காங்கோ அணிகளுக்கு இடையிலான ஃபிபா உலகக்கிண்ண கால்பந்து போட்டி சமனில் முடிந்தது.
நெவ்ஸ் கோல்
ஹூஸ்டனில் நடந்த ஃபிபா உலகக்கிண்ண கால்பந்து போட்டியில் போர்த்துகல் மற்றும் டிஆர் காங்கோ அணிகள் மோதின.
ஆட்டத்தின் 6வது நிமிடத்தில் போர்த்துகலின் ஜோவ் நெவ்ஸ் (Joao Neves) கோல் அடித்தார்.
அதன் பிறகு, 45+5வது நிமிடத்தில் டிஆர் காங்கோ அணி வீரர் யோனெ விஸ்ஸா (Yoane Wissa), கார்னர் கிக்கில் இருந்து வந்த பந்தை உயரத் தாவி தலையால் முட்டி கோல் அடித்தார். இது உலகக்கிண்ணப் போட்டியில் அந்த அணியின் முதல் கோல் ஆகும்.
ரசிகர்களுக்கு கடும் அதிர்ச்சி
இரண்டாம் பாதியில் கிறிஸ்டியானோ ரொனால்டோவின் கோல் முயற்சிகள் பலனளிக்காத நிலையில், போட்டி 1-1 என சமனில் முடிந்தது.
இது ரொனால்டோவின் (Ronaldo) ரசிகர்களுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஏனெனில், முந்தையப் போட்டியில் அவரது போட்டியாளராக கருதப்படும் மெஸ்ஸி ஹாட்ரிக் கோல் அடித்திருந்தார்.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |