பிரான்ஸ் மக்களுக்கு முக்கிய அறிவிப்பு! இந்த 2 ஐரோப்பிய நாடுகளுக்கும் போக வேண்டாம் என எச்சரிக்கை
கொரோனா பரவல் மீண்டும் தலை தூக்கி வரும் நிலையில், பிரான்ஸ் மக்களுக்கு பாதுகாப்பு அலோசனை செயலாளர் எச்சரித்துள்ளார்.
சீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ், இப்போது உலகின் பல நாடுகளில் பரவி, பல்வேறு விதங்களில் உருமாறி தீவிரமாக பரவி வருகிறது. குறிப்பாக இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்ட டெல்டா வகை கொரோனா வைரஸ், அதி தீவிரமாக பரவி வருகிறது.
பிரித்தானியாவில் இந்த டெல்டா வகை வைரஸால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் பிரான்சின் ஐரோப்பிய விவகாரங்களிற்கான அமைச்சின் செயலாளர், தங்கள் நாட்டு மக்களுக்கு ஒரு எச்சரிக்கை தகவலை கூறியுள்ளார்.
அதில், நீங்கள் விடுமுறைக்காக, ஏற்கனவே முன்பதிவு செய்திருந்ததால், குறிப்பிட்ட ஐரோப்பிய நாடுகளான ஸ்பெயின் மற்றும் போர்ச்சுக்கல் நாட்டை தவிர்த்துவிடுங்கள்.
இந்த இரண்டு நாடுகளிலும், உருமாறிய கொரோனா திரிபு வைரஸ், ஆல்பா மற்றும் டெல்டா வைரஸ்களின் தொற்று அதிகமாக இருக்கிறது.
ஏற்கனவே இந்த நாடுகளிற்கான பயணச்சீட்டுக்களைப் பதிவு செய்தவர்கள் கூட, முடிந்த அளவு அதனைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.