மீண்டு வந்த போர்த்துகல்: வேல்ஸ் அணியை வீழ்த்தி அபாரம்
Portugal beat wales by 3-2 goals: நேஷன்ஸ் லீக் போட்டி போர்த்துகல் அணி 3-2 என்ற கோல் கணக்கில் வேல்ஸை வீழ்த்தியது.
கார்டிப்பில் நடந்த வேல்ஸ் அணிக்கு எதிரான நேஷன்ஸ் லீக் போட்டியில், போர்த்துகல் அணி 3-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
புருனோ பெர்னாண்டஸ் முதல் கோல்
போர்த்துகல் மற்றும் வேல்ஸ் அணிகளுக்கு இடையிலான நேஷன்ஸ் லீக் கால்பந்து போட்டி கார்டிப்பின் Cardiff City மைதானத்தில் நடந்தது.
ஆட்டத்தின் 11வது நிமிடத்தில் போர்த்துகல் வீரர் புருனோ பெர்னாண்டஸ் (Bruno Fernandes) கோல் அடித்தார். அடுத்த இரண்டு நிமிடங்களில் வேல்ஸ் வீரர் டேவிட் ப்ரூக்ஸ் (David Brooks) பதில் கோல் அடித்தார்.
பின்னர் 40வது நிமிடத்தில் சக அணி வீரர் சோர்பா தாமஸ் கோல் அடித்தார். ஆட்டத்தின் 43வது நிமிடத்தில் போர்த்துகல் வீரர் பெட்ரோ நீட்டோ (Pedro Neto) கோல் அடித்தார். இதன்மூலம் முதல் பாதி 2-2 என சமனில் இருந்தது.
போர்த்துகல் வெற்றி
இரண்டாம் பாதியில் 25 நிமிடங்கள் வரை இரு அணி வீரர்களும் கோல் அடிக்க போராடினர்.70வது நிமிடத்தில் கார்லோஸ் ஃபோர்ப்ஸ் அடித்த கோல், போர்த்துகல் அணியின் வெற்றிக்கான கோல் ஆக மாறியது.
கொட்டும் மழையில் ஆட்டநேர முடிவில், போர்த்துகல் அணி 3-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இப்போட்டியில் கோல் அடித்த போர்த்துகல் பெட்ரோ நீட்டோ சிவப்பு அட்டை (74வது நிமிடம்) பெற்று வெளியேறினார்.
டென்மார்க்கிடம் படுதோல்வியடைந்த போர்த்துகல், இந்த வெற்றியின் மூலம் 15 புள்ளிகள் பெற்று முதலிடத்தில் உள்ளது.