ரொனால்டோவை விளையாட விடாமல் அமர வைத்தது ஏன்? சர்ச்சைக்கு அணி மேலாளர் அளித்த பதில்
ரொனால்டோவுக்கும் தனக்கும் நல்ல உறவு உள்ளது என்றும், தங்களுக்கு இடையே எந்த பிரச்சனையும் இல்லை என்றும் போர்த்துக்கல் அணி மேலாளர் தெரிவித்துள்ளார்.
அமர வைக்கப்பட்ட ரொனால்டோ
சுவிட்சர்லாந்து அணிக்கு எதிராக நடந்த சூப்பர் 16 போட்டியில் போர்த்துக்கல் அணி 6-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறியது.
இந்தப் போட்டியில் ரொனால்டோவுக்கு பதிலாக ராமோஸ் முதல் பாதியில் விளையாடி மூன்று கோல்களை அடித்தார். இரண்டாம் பாதியில் மாற்று வீரராக களமிறங்கிய ரொனால்டோ, 84வது நிமிடத்தில் அடித்த கோல் ஆப்சைடு என அறிவிக்கப்பட்டது. அதன் பின்னர் இறுதிவரை அவர் கோல் அடிக்கவில்லை.
@Tom Weller/dpa/picture alliance
கிளம்பிய சர்ச்சை
ரொனால்டோ மீதான அதிருப்தியால் தான் மேலாளர் அவரை தொடக்கத்தில் அமர வைத்தார் என செய்திகள் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. இதன் காரணமாக அடுத்தப் போட்டியில் ரொனால்டோ களமிறங்குவாரா என்ற சந்தேகம் ரசிகர்கள் இடையில் எழுந்துள்ளது.
@AFP via Getty Images
இந்த நிலையில், ரொனால்டோ தனது நீண்ட கால நண்பர் என சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் அணியின் மேலாளர் பெர்னாண்டோ சாண்டோஸ் விளக்கம் அளித்துள்ளார்.
மேலாளர் விளக்கம் அவர் கூறுகையில், 'அடுத்தப் போட்டியில் யார் தொடங்குவது என்பது இன்னும் வரையறுக்கப்பட்ட வேண்டிய ஒன்று. நான் ஏற்கனவே நேற்றைய செய்தியாளர் சந்திப்பில் ரொனால்டோ குறித்து பதிலளித்தேன். எங்களுக்குள் எந்த பிரச்சனையும் இல்லை. எனக்கு அவருடன் ஒரு வலுவான உறவு உள்ளது, எனக்கு எப்போதும் உண்டு.
அவரை சிறுவயதில் இருந்தே விளையாட்டுகளில் நான் அறிவேன். பின்னர் அது தேசிய அணியில் வளரத் தொடங்கியது. இந்த உறவு மட்டுமே வளர்ந்தது. நாங்கள் பல ஆண்டுகளாக நண்பர்களாக இருக்கிறோம், இந்த விடயங்கள் எங்களை பாதிக்காது.
எல்லா பிரச்சனைகளும் தீர்ந்துவிட்டதாக நான் ஏற்கனவே விளக்கினேன். நிறைய விருப்பங்களுடன் வந்து எப்படி சிறந்த கேப்டனாக மாறியிருக்கிறேன் என்பதற்கு உதாரணமாக அவர் இருக்கிறார்.
@AP
மேலாளர் நம்பும் மூன்று வீரர்கள்
எங்களிடம் உள்ள வீரர்கள் பலவிதமான குணாதிசயங்களைக் கொண்டுள்ளனர். ஆண்ட்ரே சில்வா மிகவும் முன்னேறி விளையாடுகிறார், ரொனால்டோ மிகவும் நிலையானவர், ராமோஸ் ஆற்றல் மிக்கவர். நான் முழுமையாக நம்பும் மூன்று வீரர்கள் என்னிடம் உள்ளனர்.
ஒவ்வொரு போட்டிக்கும் நான் எப்போதும் செய்வதைப் போலவே சரியான உத்தி என்று நான் கருதுவதைப் பயன்படுத்துவேன்' என தெரிவித்துள்ளார்.
சனிக்கிழமை நடக்கும் காலியிறுதிப் போட்டியில் மொரொக்கோ அணியை போர்த்துக்கல் எதிர்கொள்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.