64 வயதில் கிரிக்கெட் வீராங்கனையாக களமிறங்கிய பெண்! யார் அவர்?
போர்ச்சுக்கலைச் சேர்ந்த 64 வயது பெண், டி20 கிரிக்கெட்டில் அறிமுகமான இரண்டாவது வீராங்கனை எனும் பெருமையை பெற்றுள்ளார்.
ஜோவன்னா சைல்டு
மகளிர் நார்வே மற்றும் போர்த்துக்கல் அணிகளுக்கு இடையிலான டி20 தொடர் சமீபத்தில் நடந்தது.
இந்தத் தொடரில் போர்த்துக்கல் அணி 2-1 என்ற கணக்கில் வென்று கிண்ணத்தைக் கைப்பற்றியது.
போர்த்துக்கல் அணியில் ஜோவன்னா சைல்டு என்ற வீராங்கனை இத்தொடரில் அறிமுகமானார். ஆனால் அவருக்கு வயது 64 என்பதுதான் ஆச்சரியமான விடயம்.
அதிக வயதில் டி20யில் அறிமுகம்
இதன்மூலம் அதிக வயதில் டி20யில் அறிமுகமான இரண்டாவது வீராங்கனை எனும் பெருமையைப் பெற்றார்.
இதற்கு முன்பு ஜிப்ரால்டரைச் சேர்ந்த Sally Barton 66 வயதில் அறிமுகமாகி சாதனை படைத்தார்.
இதற்கிடையில், போர்த்துக்கல் அணித்தலைவர் சாரா ஃபூ-ரைலேண்ட் "நாட்டின் பல கிரிக்கெட் வீரர்களுக்கு ஜோவன்னா ஒரு முன்மாதிரி" என பாராட்டினார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |