இரண்டு பிள்ளைகள் விவகாரம்... போர்த்துகல் காவல்துறையிடம் சிக்கிய பிரெஞ்சு தாயார்
தனது இரண்டு சிறு குழந்தைகளைக் கைவிட்டதாகச் சந்தேகிக்கப்படும் பிரெஞ்சுப் பெண் ஒருவரைக் கைது செய்துள்ளதாக போர்த்துகலின் தேசியக் காவல் படை தெரிவித்துள்ளது.
ஐரோப்பா முழுவதும்
இந்த வாரத் தொடக்கத்தில், ஒரு சிறிய போர்த்துகீசிய நகரத்தில் உள்ள சாலையில் தனியாக நடந்து சென்றுகொண்டிருந்த நிலையில் அந்தக் குழந்தைகள் கண்டறியப்பட்டுள்ளனர்.

கிழக்கு பிரான்சின் கோல்மார் நகரில் உள்ள தங்கள் வீட்டிலிருந்து, அந்தப் பெண்ணும் 4 மற்றும் 5 வயதுடைய குழந்தைகளும் காணாமல் போனதாக அவர்களின் தந்தை புகாரளித்ததைத் தொடர்ந்து, அவர்களைக் கண்டறிய உதவும்படி பிரெஞ்சு அதிகாரிகள் ஐரோப்பா தழுவிய கோரிக்கையை விடுத்திருந்தனர்.
போர்த்துகலின் நீதித்துறை காவல்துறை வியாழக்கிழமை வெளியிட்ட ஓர் அறிக்கையில், அலன்டெஜோ பிராந்தியத்தில் உள்ள அல்கேசர் டோ சால் நகரில் செவ்வாய்க்கிழமை அன்று ஒரு சாலையோரத்தில் குழந்தைகள் கண்டெடுக்கப்பட்டதாகவும், அவர்கள் தாயாரால் கைவிடப்பட்ட பின்னர் வழிதவறிச் சென்றிருக்கலாம் எனவும் தெரிவித்தது.
கைவிட்டதாக சந்தேகம்
இதனிடையே, போர்த்துகலின் தேசியக் காவல் படை வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், பாத்திமா நகரில் 41 வயதுப் பெண்ணையும் 55 வயது ஆணையும் கைது செய்துள்ளதாகவும், தனியாக மீட்கப்பட்ட இரு குழந்தைகளையும் இவர்கள் கைவிட்டதாக எழுந்த சந்தேகத்தின் அடிப்படையில் கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும், ஆபத்துக்கு உள்ளாக்கியது மற்றும் கைவிட்டது ஆகிய குற்றங்களுக்காக, கிரண்டோலாவின் நீதி மன்றத்தில் அந்தப் பெண் விசாரிக்கப்பட இருக்கிறார் எனவும் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |