ரொனால்டோ அப்படி ஒருபோதும் கூறவில்லை: சர்ச்சைக்கு மத்தியில் போர்ச்சுக்கல் அணி விளக்கம்
உலக கோப்பை கால்பந்தில் சுவிட்சர்லாந்து அணிக்கு எதிரான போர்ச்சுக்கலின் காலிறுதி போட்டி தொடங்கிய போது, நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ தேசிய அணியில் இருந்து விலகப் போவதாக மிரட்டல் விடுத்ததாக தகவல் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.
அமர வைக்கப்பட்ட ரொனால்டோ
உலக கோப்பை கால்பந்து போட்டியில் லீக் ஆட்டங்கள் நிறைவு பெற்று நாக் அவுட் சுற்று ஆட்டங்கள் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இதில் போர்ச்சுகல் அணி சுவிட்சர்லாந்து அணியை வீழ்த்தி காலிறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளது.
Primeiros dois objectivos alcançados: apuramento e liderança no nosso grupo. Mas há ainda muito mais pela frente! Vamos Portugal!??❤️ pic.twitter.com/8cUV7ti3x1
— Cristiano Ronaldo (@Cristiano) December 2, 2022
ஆனால் இந்த போட்டியில் போர்ச்சுகல் அணியின், கேப்டனும், கோல் மெஷின் என அழைக்கப்படும் நட்சத்திர வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ போட்டியில் களமிறக்க படவில்லை.
அத்துடன் காலிறுதி போட்டியில் கடைசி நேரத்தில் மாற்று வீரராக மட்டுமே களமிறக்கப்பட்டார்.
ரொனால்டோ அப்படி எதுவும் கூறவில்லை
இந்நிலையில் உலக கோப்பை கால்பந்து போட்டியில் சுவிட்சர்லாந்து அணிக்கு எதிரான போர்ச்சுக்கலின் காலிறுதி போட்டி தொடங்கிய போது, கிறிஸ்டியானா ரொனால்டோ தேசிய அணியில் இருந்து விலகப் போவதாக மிரட்டல் விடுத்ததாக தகவல் வெளியானது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
Prestes a iniciarmos a nossa campanha na maior competição do Mundo. Uma aventura que desejamos longa e repleta de sucessos, de forma a elevarmos bem alto o nome e a bandeira do nosso país. Queremos encher todos os portugueses de orgulho e alegria. Não há impossíveis! Força ?????? pic.twitter.com/GhfbIM5UDo
— Cristiano Ronaldo (@Cristiano) November 23, 2022
இது குறித்து போர்ச்சுக்கல் கால்பந்து அணி நிர்வாகம் அளித்த தகவலில், கத்தார் உலக கோப்பை கால்பந்து போட்டியின் போது கேப்டன் கிறிஸ்டியானோ ரொனால்டோ எந்த நேரத்திலும் தேசிய அணியை விட்டு வெளியேறுவதாக மிரட்டவில்லை.
அவர் தேசிய அணிக்காகவும் நாட்டிற்காகவும் ஒவ்வொரு நாளும் ஒரு தனித்துவமான சாதனையை உருவாக்குகிறார். அதை நாம் மதிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
மேலும் தலைமை பயிற்சியாளர் பெர்னாண்டோ சான்டோஸ் செய்தியாளர்களை சந்தித்த போது, சுவிட்சர்லாந்து அணிக்கு எதிரான போட்டியின் போது ரொனால்டோவை சந்தித்தேன், அவர் எப்போதும் ஆரம்பத்திலேயே களமிறங்கியதால், எனது முடிவுக்கு அவர் முதலில் திருப்தியடையவில்லை. இது நல்ல யோசனை என்று நினைக்கிறீர்களா? என்று கேட்டார்.
Há um Mundial que Portugal já ganhou: o dos adeptos! Incrível o apoio e o carinho que temos sentido de tantos portugueses (e não só!) aqui no Catar, tão longe da nossa pátria. Continuem a apoiar nos bons e nos maus momentos, tudo faremos para retribuir com vitórias! Força,???? pic.twitter.com/LKSTQ9W3FB
— Cristiano Ronaldo (@Cristiano) December 9, 2022
அதற்கு என்னுடைய கருத்துகளை நான் விளக்கினேன், அவரும் அதை ஏற்றுக் கொண்டார். ஆனால் அவர் எப்போதும் தேசிய அணியை விட்டு வெளியேற விரும்புவதாக என்னிடம் ஒருபோதும் ரொனால்டோ தெரிவிக்கவில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.
இதனால் ரொனால்டோ சக வீரர்களை ஊக்குவிக்க முடிவு செய்தார், மேலும் போட்டியில் போர்ச்சுக்கல் அணி அடித்த அனைத்து கோல்களையும் ரொனால்டோ கொண்டாடினார்.