பிரித்தானியா பச்சை பட்டியலிருந்து பிரபல ஐரோப்பிய நாடு நீக்கம்! சுற்றுலா சென்ற பிரித்தானியர்கள் திண்டாட்டம்: கசிந்த முக்கிய தகவல்
பிரித்தானியாவின் பயணப் பட்டியல் இன்று வெளியாகவுள்ள நிலையில் பிரபல ஐரோப்பிய நாடான போர்ச்சுகல் பச்சை பட்டியலில் இருந்து நீக்கப்பட்டு அம்பர் பட்டியலில் சேர்க்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
கொரோனா பிடியிலிருந்து எப்படி வெளியேறுவது என்பது குறித்து இன்று இங்கிலாந்து பிரதமர், வட அயர்லாந்து, ஸ்காட்லாந்து மற்றும் வேல்ஸ் முதல் அமைச்சர்கள் ஆகியோர் காணொளி காட்சி மூலம் சந்திப்பில் ஈடுப்பட்டனர்.
இந்த சந்திப்பு மற்றும் கூட்டு உயர் பாதுகாப்பு மையம் வழங்கிய ஆலோசனையை தொடர்ந்து பிரத்தானியா, போர்ச்சுகல் நாட்டை பச்சை பட்டியலில் இருந்து நீக்கி அம்பர் பட்டியலில் சேர்க்க முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
போர்ச்சுகல் அம்பர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளதால், அந்த நாட்டிலிருந்து பிரித்தானியா திரும்பும் அனைவரும் 10 நாட்களுக்கு தனிமைப்படுத்தலில் இருக்க வேண்டும்.
எதிர்வரும் செவ்வாய்க்கிழமை காலை 4 மணி முதல் போர்ச்சுகல் அம்பர் பட்டியலில் சேர்க்கப்படும் என தெரியவந்துள்ளது.
இதனால், போர்ச்சுகலுக்கு சுற்றுலா சென்றுள்ள பிரித்தானியா பயணிகள், தனிமைப்படுத்தலை தவிர்க்க சுற்றுலாவை பாதியிலே முடித்துக்கொண்டு நாடு திரும்ப வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
நேற்று போர்ச்சுகலில் புதிதாக 724 பேருக்கு தொற்று உறுதியானது மற்றும் ஒருவர் கொரோனாவால் பலியானர்.
ஆனால், ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் படி, பிரித்தானியாவில் கிட்டதட்ட 50% மக்கள் இரண்டு டோஸ் தடுப்பூசி போட்டுள்ள நிலையில், போர்ச்சுகலில் கிட்டதட்ட 20% மக்களே முழுமையாக தடுப்பூசி போட்டுள்ளனர்.
தற்போது வரை பிரித்தானியா ஊடகங்கள் வெளியிட்ட தகவலின் படி, பச்சை பட்டியலில் மேலும் எந்த நாடுகளும் சேர்க்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், இன்னும் சிறிது நேரத்தில் புதுப்பிக்கப்பட்ட பயண பட்டியலை பிரித்தானியா அரசாங்கம் அதிகாரப்பூர்வமாக வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.