திமுகவின் அறிவாலய சுவரை தொட்டுத்தான் பாருங்க.., அண்ணாமலைக்கு சவால் விட்ட போஸ் வெங்கட்
திமுகவின் அண்ணா அறிவாலயம் குறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பேசியது தொடர்பாக நடிகர் போஸ் வெங்கட் கருத்து தெரிவித்துள்ளார்.
போஸ் வெங்கட் விமர்சனம்
திருவான்மியூரில் நேற்று மத்திய பட்ஜெட் விளக்கப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த நிகழ்வில் கலந்துகொண்டு பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, "பதவியில் நான் தொடர முடியாது என்பது எனக்கு தெரியும்.
ஆனால் நான் இந்த பதவியில் இருந்து செல்லும் போது திமுகவின் தலைமையகமாக அண்ணா அறிவாலயத்தில் உள்ள ஒவ்வொரு செங்கல்லையும் எடுக்காமல் விடமாட்டோன்" என்று பேசியிருந்தார்.
இவரின் கருத்துக்கு திமுகவினர் சார்பில் பலரும் தங்களது கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.
அந்தவகையில் நடிகரும், திமுக ஆதரவாளருமான போஸ் வெங்கட் தனது ட்விட்டர் எக்ஸ் தளத்தில், "அறிவாலய சுவர் வெறும் செங்கலால் எழுப்பப்பட்டது அல்ல. அது ஒவ்வொரு ஏழை தி.மு.க தொண்டனின் குருதி, நம்பிக்கை.
நாளைய தலைமுறையின் அறிவுக்கூடம். வாருங்களேன் தோழர் அண்ணாமலை, சும்மா தொட்டுத்தான் பாருங்களேன்" என்று தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |