டாக்ஸி சாரதி என நம்பவைத்து பிரித்தானியர் செய்த கொடுஞ்செயல்: நீதிமன்றம் அளித்த தீர்ப்பு
பிரித்தானியாவில் டாக்ஸி சாரதி என நம்ப வைத்து, இரவு விடுதிகளில் இருந்து பெண்களை கடத்திச் சென்று சீரழித்த நபருக்கு 22 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
போலியான டாக்ஸியில் ஏமாற்றி
பர்மிங்காம் பகுதியில் இரவு நேரம் தனியாக சிக்கும் பெண்களை தமது போலியான டாக்ஸியில் ஏமாற்றி ஏற்றிச் செல்வதை வாடிக்கையாக செய்து வந்துள்ளார் 41 வயதான தசவர் இக்பால்.
@wmp
நீதிமன்றத்தில் முன்னெடுக்கப்பட்ட விசாரணையில், சில மாதங்கள் இடைவெளியில் இருவர் குறித்த நபரால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானார்கள் என தெரிய வந்துள்ளது.
இதில் பாதிக்கப்பட்ட ஒருவர் துணிச்சலாக பொலிசாருக்கு உதவிய நிலையில், தசவர் இக்பால் கைதானதுடன் வழக்கும் பதியப்பட்டது. கடந்த டிசம்பர் 19, 2021 அன்று டாக்ஸி சாரதி என பாசாங்கு செய்து, சிட்டி சென்டரில் இருந்து வீட்டிற்கு லிப்ட் கொடுத்து ஒரு பெண்ணை சீரழித்துள்ளார் இக்பால்.
Digbeth பகுதியில் இருந்து பெண் ஒருவரை தமது டாக்ஸியில் அழைத்து சென்றுள்ளார். ஆனால் அவர் சம்பவயிடத்தில் இருந்து தப்பி, பொலிசாருக்கு தகவல் அளிக்க, இக்பால் பின்னர் கைதாகி, பிணையில் வெளிவந்துள்ளார்.
இந்த நிலையில், 2022 ஜூலை 10ம் திகதி பெண் ஒருவரை வலுக்கட்டாயமாக தமது டாக்ஸியில் அழைத்துச் சென்று, உள்ளூர் மதுபான விடுதி வாகன நிறுத்துமிடத்தில் துஸ்பிரயோகத்திற்கு இரையாக்கியுள்ளார்.
22 ஆண்டுகள் சிறை தண்டனை
சமயோசிதமாக செயல்பட்ட அந்த பெண், இக்பாலின் தொலைபேசி இலக்கத்தை பெற்று பொலிசாருக்கு அளித்துள்ளார். இதனையடுத்து துரிதமாக செயல்பட்ட பொலிசார், இக்பாலை கைது செய்துள்ளதுடன் வழக்கும் பதிந்துள்ளனர்.
@rex
இந்த வழக்கின் விசாரணை முடிவுக்கு வந்த நிலையில், வெள்ளிக்கிழமை பர்மிங்காம் கிரவுன் நீதிமன்றம் அவருக்கு 22 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துள்ளது. வெஸ்ட் மிட்லாண்ட்ஸ் காவல்துறையைச் சேர்ந்த டிடெக்டிவ் கான்ஸ்டபிள் சோனியா ராம் தெரிவிக்கையில்,
இக்பால் ஒரு இரக்கமற்ற பாலியல் குற்றவாளி என குறிப்பிட்டுள்ளார்.
தாம் ஒரு டாக்ஸி சாரதி என அப்பாவி பெண்களை நம்பவைத்து ஏமாற்றி, தமக்கு இரையாக்கியுள்ளார் என டிடெக்டிவ் கான்ஸ்டபிள் சோனியா ராம் தெரிவித்துள்ளார்.