ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணையும் கனடா... சாத்தியமா?

European Union Canada
By Balamanuvelan Mar 09, 2026 06:47 AM GMT
Balamanuvelan

Balamanuvelan

in கனடா
Report

கனடா ஒரு வட அமெரிக்க நாடு! உலக வரைபடத்தைப் பார்த்தாலே, கனடாவும் அமெரிக்காவும் வெறும் ஒரு எல்லைக்கோட்டினால் மட்டுமே பிரிக்கப்பட்டிருப்பது தெளிவாகத் தெரியும்.

அப்படியிருந்தும், அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் கொடுத்துவரும் தொல்லையால், பேசாமல் ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணைந்துவிடலாமா என்னும் எண்ணம் கனடாவுக்கு உருவாகிவருவதுபோல் தெரிகிறது.

ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணையும் கனடா?

குறிப்பாக, மார்க் கார்னி கனடாவின் பிரதமராக பொறுப்பேற்றதிலிருந்தே, அதுவும், ட்ரம்ப் கனடாவை அமெரிக்காவின் 51ஆவது மாகாணமாக இணைக்கப்போவதாக மிரட்ட, கூடுதலாக வரிகளை விதிக்க, அமெரிக்காவை சார்ந்திருப்பதைக் குறைப்பதற்காக, ஐரோப்பிய ஒன்றியம் பக்கம் சாய்ந்துவருகிறது கனடா. 

ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணையும் கனடா... சாத்தியமா? | Possibility Of Canada Joins In Eu

’ஐரோப்பா அல்லாத நாடுகளில், மிகவும் ஐரோப்பிய நாடாக திகழும் கனடா, ஒரு சிறந்த உலகத்தை உருவாக்க, முதலில் ஐரோப்பிய ஒன்றியத்தையே நோக்கிப்பார்க்கிறது’ என்று கடந்த ஜூன் மாதம் பிரஸ்ஸல்ஸில் நடந்த ஐரோப்பிய ஒன்றிய - கனடா உச்சி மாநாட்டில் பேசினார் கனடா பிரதமரான மார்க் கார்னி.

அந்த தருணத்திலிருந்து, கனடாவுக்கும் ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் இடையே ஒரு நிலையான மற்றும் ஆழமான ஒருங்கிணைப்பு உருவாகிவருகிறது.

அதன் பின்னர், கனடா ஐரோப்பிய ஒன்றியத்துடன் பாதுகாப்புக் கூட்டாண்மை ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டது. 

ஈரான் போரில் கனடாவும் இணைகிறதா? பிரதமரின் பதில்

ஈரான் போரில் கனடாவும் இணைகிறதா? பிரதமரின் பதில்

அத்துடன், இந்த வாரம் இரு தரப்பினரும் தங்கள் தற்போதைய தடையில்லா வர்த்தக ஒப்பந்தத்தை மேலும் மேம்படுத்த ஒப்புக்கொண்டுள்ளனர்.

ஆக, வட அமெரிக்க நாடான கனடா, ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணைகிறதா, அது சாத்தியமா என்னும் கேள்விகள் எழுந்துள்ளன!

ஐரோப்பிய ஒன்றியத்துடன் கனடா இணைவது சாத்தியமா?

நிபுணர்களிடம், ஐரோப்பிய ஒன்றியத்துடன் கனடா இணைவது குறித்து விவாதித்தால், அது சாத்தியமே என்கிறார்கள் அவர்கள்!

கனடா, ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணைந்தால், அது கனடாவின் அடையாளத்தை நீர்த்துப்போகச் செய்யாது, மாறாக, உலகின் மீதான கனடாவின் தாக்கத்தை அது அதிகரிக்கத்தான் செய்யும் என்கிறார் வரலாறு மற்றும் பொருளாதார நிபுணரான Augusto Lopez Claros என்பவர். 

ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணையும் கனடா... சாத்தியமா? | Possibility Of Canada Joins In Eu

கடந்த கோடையில், கனடா ஐரோப்பிய ஒன்றியத்துடன் நெருக்கமான கூட்டாண்மையை விரும்புவதாகவும், ஆனால் அதில் உறுப்பினராக விரும்பவில்லை என்றும் கார்னி கூறினார். ஆனால், கனேடியர்களில் பாதிக்கும் சற்று குறைவான கனேடியர்கள், கனடா ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணையும் இந்த யோசனையை ஆதரிப்பதாக Abacus Data என்னும் ஆய்வமைப்பு தெரிவிக்கிறது.

Abacus Data அமைப்பின் தலைமை நிர்வாக அதிகாரியான David Coletto, கனடா ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணைவது தொடர்பில் ஒரு கேள்வி எழுமானால், ஏற்கனவே அமெரிக்கா தங்களுக்கு துரோகம் செய்துவிட்டதாக கனேடியர்கள் கருதும் நிலையில், அவர்களில் பலர் அதற்கு ஆதரவளிப்பார்கள் என தான் நம்புவதாக தெரிவிக்கிறார்.

அதே நேரத்தில், அப்படி கனடா ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணையுமானால், கனடா தனது இறையாண்மையை தியாகம் செய்ய நேரிடும் என்கிறார் வர்த்தகத்துறை நிபுணரான Meredith Lilly என்பவர்.

அப்படி கனடா ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணையும்போது, கனடாவின் வர்த்தக் கொள்கைகள் தொடர்பில் முடிவுகள் எடுப்பது ஐரோப்பிய நாடாளுமன்றமாகத்தான் இருக்குமேயொழிய கனடாவாக இருக்காது என்கிறார் அவர். 

ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணையும் கனடா... சாத்தியமா? | Possibility Of Canada Joins In Eu

ஆக, கனடா ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணைவதை விடவும், ஜேர்மனி, முக்கிய ஐரோப்பிய ஒன்றிய நாடுகள், பிரித்தானியா, ஜப்பான், தென்கொரியா, அவுஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்துடன் இணைந்து ஒரு கூட்டமைப்பை உருவாக்கவேண்டும்.

அந்த நாடுகளின் கூட்டமைப்பு, அமெரிக்கா போன்ற தொல்லை கொடுக்கும் நாடுகளை எதிர்த்து நிற்கவேண்டும் என்கிறார் கனடா அமெரிக்க உறவுகள் நிபுணர்கள் குழுவின் தலைவரான Fen Osler Hampson என்பவர். 

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் 


மரண அறிவித்தல்

அல்வாய் கிழக்கு, London, United Kingdom, நவிண்டில்

08 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Vasavilan, சுவிஸ், Switzerland

10 Mar, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வவுனியா, Milton Keynes, United Kingdom

25 Feb, 2026
நன்றி நவிலல்

இணுவில், Scarborough, Canada

09 Feb, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, சுன்னாகம், Scarborough, Canada

06 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கோப்பாய் மத்தி, Brampton, Canada

07 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், Southgate, United Kingdom

08 Mar, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு 4ம் வட்டாரம், நெடுந்தீவு, பிரான்ஸ், France, London, United Kingdom, நல்லூர்

09 Feb, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, கொழும்பு

06 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாவி, தோணிக்கல், Liverpool, United Kingdom

09 Mar, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நுவரெலியா, Bandarawela, கம்பளை, நாவலப்பிட்டி

08 Mar, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

17 Feb, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், வடலியடைப்பு

09 Mar, 2022
மரண அறிவித்தல்

நல்லூர், Scarborough, Canada

05 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

Ittavil, எழுதுமட்டுவாள், திருகோணமலை, London, United Kingdom

07 Mar, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

08 Mar, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

08 Mar, 2021
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, மாதனை, மாவிட்டபுரம், Mississauga, Canada

02 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்புத்துறை, Zürich, Switzerland

02 Mar, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US