1000 கோல்கள் இலக்கை நெருங்கும் ரொனால்டோ: கணிப்புகள் சொல்லும் சாத்தியக் கூறுகள்
கிறிஸ்டியானோ ரொனால்டோ தனது 1,000 கோல்கள் இலக்கினை புதிய சீஸனில் எட்டிவிடுவார் என கணிக்கப்பட்டுள்ளது.
அல் நாஸரின் நட்சத்திர வீரராக இருக்கும் கிறிஸ்டியானோ ரொனால்டோ, தனது புதிய சீஸனில் 1000 எனும் இலக்கினை எட்டிவிடுவார் என்று கூறப்படுகிறது.
கிறிஸ்டியானோ ரொனால்டோ
கால்பந்து ஜாம்பவானான போர்த்துகலின் கிறிஸ்டியானோ ரொனால்டோ (Cristiano Ronaldo) பல்வேறு சாதனைகளை படைத்துள்ளார்.
என்றாலும், தொழில்முறை போட்டிகளில் 1000 கோல் அடிப்பதுதான் தனது இலக்கு என அவர் கூறி வருகிறார். தற்போது 976 கோல்களுடன் இருக்கும் ரொனால்டோ புதிய சீஸனைத் தொடங்கியுள்ளார்.
1000 கோல்கள்
கடந்த 22 சீஸன்களிலும் ஒன்றைத் தவிர, மற்ற அனைத்திலும் ரொனால்டோ 24 கோல்களுக்கும் அதிகமான கோல்கள் அடித்துள்ளார்.
எனவே, நடப்பு சீஸனில் அவர் 24 கோல்கள் அடிக்கும்பட்சத்தில் 1000 கோல்கள் இலக்கினை ரொனால்டோ எட்டிவிடுவார் என கணிக்கப்பட்டுள்ளது.
41 வயதாகும் ரொனால்டோ இறுதியாக அந்த 1,000-வது கோலினை அடிக்கும்போது, அவருக்குக் கிடைக்கவிருக்கும் பாராட்டுக்களுக்கும், உலகளாவிய ஊடகங்களின் கவனத்திற்கும் அவர் முழுத் தகுதியுடையவராக இருப்பார்.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |