சுவிட்சர்லாந்தில் இதுவரை கொரோனா தடுப்பூசி பெறாதவர்களுக்கு ஒரு எச்சரிக்கை செய்தி
சுவிட்சர்லாந்தில் கொரோனா தடுப்பூசி பெறாதவர்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
அக்கம்பக்கத்து நாடுகளிலெல்லாம் பொது இடங்களுக்கு செல்வதற்குகூட தடுப்பூசி பாஸ்போர்ட் தேவை என்ற நிலை இருக்கும் நிலையில், சுவிட்சர்லாந்தில் வாழும் தடுப்பூசி பெறாதவர்களோ மிக சுதந்திரமாக நடமாடிக்கொண்டிருக்கிறார்கள்.
ஆஸ்திரியா தடுப்பூசி பெறாதவர்கள் நட்டுக்குள்ளேயே நுழையக்கூடாது என்கிறது, ஜேர்மனியோ இலவச கொரோனா பரிசோதனையை முடிவுக்கு கொண்டு வர இருக்கிறது. ஆனால், சுவிட்சர்லாந்து மட்டும் ரிலாக்ஸாக இருக்கிறது. சொல்லப்போனால், இரவு விடுதிகள் மற்றும் அதிகம் பேர் கூடும் நிகழ்ச்சிகளுக்கு மட்டுமே சில கட்டுப்பாடுகள் உள்ளன.
இதற்கிடையில், ஏப்ரலில் அறிவித்தபடி, நாடு சகஜ நிலைக்குத் திரும்ப முடியுமா என்பது குறித்து விவாதிக்க பெடரல் கவுன்சில் இன்று கூட இருப்பதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது. வயது வந்த அனைவரும் தடுப்பூசி பெற்றிருந்தால் மட்டுமே நாடு சகஜ நிலைக்குத் திரும்புவது சாத்தியம்.
அப்படி இருக்கும் பட்சத்தில், ஏற்கனவே அரசு கூறியிருந்தபடி தடுப்பூசி பெறாதவர்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வாய்ப்புள்ளது.
அதன்படி, அடுத்த வாரத்துக்குள் கொரோனா தடுப்பூசி பெற்றுக்கொள்ளாதவர்கள், உணவகங்கள், மதுபான விடுதிகள் மற்றும் பிற பொது இடங்களுக்குச் செல்வதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.