தடுப்பூசி போட மறுத்தால் வெளியேற்றப்படுவீர்கள்... சுவிஸ் பத்திரிகை வெளியிட்டுள்ள அதிரடி தகவல்
சுவிட்சர்லாந்தில் தடுப்பூசி போட்டுக்கொள்ள மறுப்பவர்கள் மீது கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் என ஃபெடரல் கவுன்சில் அறிவித்துள்ளது. சிலர் இதை கட்டாய தடுப்பூசித் திட்டம் என விமர்சிக்க, மற்றவர்களோ ரிஸ்க் எடுத்து பொறுப்பாக தடுப்பூசி போட்டுக்கொள்பவர்களுக்கு சலுகைகள் வழஙக்வேண்டாமா என்கிறார்கள்.
சுவிஸ் சுகாதாரத்துறை அமைச்சர் Alain Berset இது குறித்துக் கூறும்போது, தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கு சுதந்திரத்தை மறுப்பது அநீதி என்றார்.
உண்மைதான் என்று கூறும் லிபரல் கட்சி நாடாளுமன்ற உறுப்பினரான Regine Sauter, தடுப்பூசி போட்டுக்கொள்ள மறுக்கும் சிலரால், மற்றவர்கள் அனைவரும் கட்டுப்பாடுகளுக்குள் வாழவேண்டியிருப்பது நியாயமல்ல என்கிறார்.
தேசிய நெறிமுறைகள் கமிட்டியும் அதை ஆமோதிக்கிறது. துணை அதிபரான Markus Zimmermann, மருத்துவமனைகளுக்கு அழுத்தத்தை உண்டாக்கும் தடுப்பூசி மறுப்போருக்கு கட்டுப்பாடுகள் விதிக்கவேண்டும் என்கிறார்.
இவர்கள் எல்லாரும் இப்படி மென்மையாக சொல்லிக்கொண்டிருக்கும் நேரத்தில், சுவிஸ் பத்திரிகையான Blick, தடுப்பூசி போட மறுப்போரை முரட்டுத்தனமான வார்த்தைகளை பயன்படுத்தி விமர்சித்துள்ளது.
தடுப்பூசி போட்டுக்கொண்டதை நிரூபிக்கும் சான்றிதழ் இல்லாதவர்கள் உணவகங்கள்,
மதுபான விடுதிகள் மற்றும் உடற்பயிற்சி மையங்களிலிருந்து வெளியே தூக்கி
வீசப்படுவார்கள் என்று கூறியுள்ளது அந்த பத்திரிகை!