பன்றியின் சிறுநீரகத்தை மனிதனுக்கு மாற்றுவது சாத்தியமா? மருத்துவர் கூறும் விளக்கம்
பன்றியின் சிறுநீரகத்தை மனிதனுக்கு மாற்றுவது தொடர்பாக சிறுநீரக மருத்துவர் ஒருவர் கருத்து தெரிவித்துள்ளார்.
மருத்துவர்
இந்திய மாநிலம், ஆந்திரப்பிரதேசத்தில் உள்ள விசாகப்பட்டினத்தில் பன்றியின் சிறுநீரகத்தை மனிதனுக்கு மாற்றுவது சிறுநீரக மருத்துவர் வசிஷ்டா ததாபுடி கருத்து தெரிவித்துள்ளார்.
இவர் அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள லாங்கோன் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.
இந்நிலையில், விசாகப்பட்டினத்தில் சொசைட்டி ஆஃப் நெப்ராலஜியின் ஆறாவது ஆண்டு மாநாடு நடைபெற்றது. இதில் இரண்டாவது நாளில் மருத்துவர் வசிஷ்டா கலந்து கொண்டு, பன்றியின் சிறுநீரகத்தை மனிதனுக்கு மாற்றுவதற்கு சாத்தியம் இருக்கிறதா என்பதை பற்றி பேசினார்.
2 மாதம் செயல்பாடு
மருத்துவர் வசிஷ்டா கூறுகையில், "சமீபத்தில், மரபணு ரீதியாக ஒழுங்குப்படுத்தப்பட்ட பன்றியின் சிறுநீரகத்தை மனித உடலுக்கு அறுவை சிகிச்சை மூலம் மாற்றம் செய்யப்பட்டது.
இதில், இயல்பான நிலையில் 2 மாத காலம் செயல்பட்டது. இது குறித்தான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட இருக்கின்றன. அதன் பின்னரே, மருத்துவ சிகிச்சை முறை வழக்கத்துக்கு வரும். இதன் மூலம், எதிர்காலத்தில் உறுப்பு சிகிச்சை முறையில் மாற்றம் வரலாம்" என்று பேசினார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |