மாதந்தோறும் ரூ.5,000 ஓய்வூதியமாக கிடைக்கும்.., அஞ்சல் துறையின் திட்டம்
மத்திய அரசின் அடல் பென்சன் திட்டம் (APY) பாதுகாப்புத் திட்டமாக வளர்ந்து வருகிறது.
நிதி அமைச்சகம் ஏப்ரல் 22 அன்று வெளியிட்ட தகவலின்படி, இதுவரை 9 கோடிக்கும் அதிகமானோர் இந்த திட்டத்தில் சேர்ந்துள்ளனர்.
2025-26 நிதியாண்டில் மட்டும் 1.35 கோடி நபர்கள் புதிதாக இதில் இணைந்துள்ளனர். இது தொடங்கியதிலிருந்து ஒரு ஆண்டில் கிடைத்த அதிகபட்ச சேர்க்கையாகும்.

இந்த திட்டம் 2015 மே 9ஆம் திகதி அன்று தொடங்கப்பட்டது. மேலும், 18 முதல் 40 வயதுக்குள் உள்ள இந்தியர்கள் இந்த திட்டத்தில் சேரலாம்.
அமைப்புசாரா துறையில் வேலை செய்பவர்கள் மற்றும் குறைந்த வருமானம் உள்ளவர்களுக்கு இது பாதுகாப்பு திட்டமாக உள்ளது.
இந்த திட்டத்தின் முக்கிய அம்சம் உறுதியான ஓய்வூதியம். மேலும், இத்திட்டத்தின் மூலம் 60 வயதுக்கு பிறகு மாதம் ரூ.1,000 முதல் ரூ.5,000 வரை ஓய்வூதியம் கிடைக்கும்.
இந்த திட்டத்தை ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் (PFRDA) நிர்வகிக்கிறது.
பயனாளி இறந்தால், அவரது துணைக்கு ஓய்வூதியம் தொடர்ந்து வழங்கப்படும். இருவரும் இறந்தால், சேமித்த தொகை நாமினிக்கு வழங்கப்படும்.
அடல் பென்சன் திட்டம் என்பது ஒரு தன்னார்வ, பங்களிப்பு ஓய்வூதியத் திட்டமாகும்.
இது முக்கியமாக ஏழைகள், நலிவடைந்தோர் மற்றும் அமைப்புசாரா துறையில் உள்ள தொழிலாளர்களுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |