Post Office FD vs RD.., ரூ.6 லட்சம் முதலீடு செய்தால் 5 வருடங்களுக்கு பிறகு எதில் அதிக லாபம் கிடைக்கும்?
அஞ்சல் அலுவலக FD மற்றும் RD திட்டத்தில் ரூ.6 லட்சத்தை முதலீடு செய்தால் 5 வருடங்களுக்கு பிறகு எதில் அதிக லாபம் கிடைக்கும் என்பதை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
Post Office FD
இந்தியாவில் பிரபலமான முதலீட்டுத் திட்டங்களில் அஞ்சல் அலுவலகம் சேமிப்புத் திட்டமும் ஒன்றாகும். தற்போது புது நிதியாண்டு தொடங்கிய நிலையில் வரிகளைச் சேமிக்கவும், சிறந்த வருமானத்தைப் பெறவும் நிலையான வைப்புத் திட்டங்களில் முதலீடு செய்யலாம்.
அந்தவகையில், 1 வருடம், 2 வருடம், 3 வருடம் மற்றும் 5 வருடம் கொண்ட அஞ்சலக நிலையான வைப்புத் திட்டங்கள் உள்ளது. அரசு உத்தரவின் படி உத்தரவாதமான வருமானத்தை வழங்குகிறது.
Post Office Fixed Deposit Interest Rates ஆனது 1 வருடத்திற்கு 6.90%, 2 வருடத்திற்கு 7.00%, 3 வருடத்திற்கு 7.10% எனவும், 5 வருடத்திற்கு 7.50% எனவும் உள்ளது.
இந்நிலையில் நாம் Post Office -ல் 5 வருட FD மூலம் ரூ.6 லட்சம் முதலீடு செய்தால் வட்டியாக ரூ.2,69,969 கிடைக்கும். இதனால், முதிர்வுத் தொகை ரூ.8,69,969 ஆக இருக்கும்.
Post Office RD
தபால் நிலையத்தின் திட்டங்களில் சிறந்த வருமானத்தை தரும் திட்டங்களில் ஒன்று தான் ரெக்கரிங் டெபாசிட் (Post Office Recurring Deposit) சேமிப்பு திட்டம்.
இந்த திட்டத்தில் ரூ.100 மற்றும் அதற்கு மேல் (ரூ. 10 இன் மடங்குகளில்) மாதாந்திர முதலீடுகளை செலுத்தலாம். Recurring Deposit கணக்குக்கான கால வரம்பு 5 ஆண்டுகள் ஆகும்.
ஒவ்வொரு காலாண்டு முடியும் போது கூட்டு வட்டியுடன் உங்களது கணக்கில் சேர்க்கப்படும். இந்த திட்டத்தில் 6.7% வட்டி (Interest) வழங்கப்படுகிறது. குறிப்பாக இந்த திட்டத்தில் ஓராண்டுக்குப் பிறகு கடன் பெறலாம்.
இந்நிலையில் நாம் Post Office Recurring Deposit திட்டத்தில் மாதம் தோறும் ரூ.10,000 முதலீடு செய்ய வேண்டும்.
அதன்படி, 5 ஆண்டுகளுக்கு மொத்த வைப்புத்தொகை ரூ.6,00,000 ஆகவும், பெறப்பட்ட வட்டி ரூ.1,13,659 ஆகவும் இருக்கும். இதன்படி, உங்கள் மொத்த முதிர்வுத் தொகை ரூ.7,13,659 ஆக கிடைக்கும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |