ரூ.1 லட்சம் முதலீடு செய்தால் ரூ. 2 லட்சமாக கிடைக்கும்.., பணத்தை இரட்டிப்பாக்கும் திட்டம்
Post office kvp scheme details in tamil- பாதுகாப்பான முதலீட்டையும், நிலையான வருமானத்தையும் விரும்புபவர்களுக்கு அஞ்சல் அலுவலக சேமிப்புத் திட்டங்கள் உதவியாக உள்ளன.
பாதுகாப்பான முறையில் பணத்தை முதலீடு செய்ய விரும்புபவர்களுக்கு அஞ்சலகத்தின் கிசான் விகாஸ் பத்ரா (KVP) திட்டம் ஒரு வாய்ப்பாக உள்ளது.
இந்த கிசான் விகாஸ் பத்ரா திட்டத்தில் தற்போது ஆண்டுக்கு 7.5% வட்டி வழங்கப்படுகிறது.
இத்திட்டம் 115 மாதங்கள், அதாவது 9 ஆண்டுகள் 7 மாதங்கள் கழித்து முதலீட்டுத் தொகை இரட்டிப்பாகும் வகையில் செயல்படுகிறது.

இதில் குறைந்தபட்சம் ரூ.1,000 முதலீடு செய்து கணக்கைத் தொடங்கலாம். அதன்பிறகு ரூ.100ன் மடங்குகளில் முதலீடு செய்யலாம்.
உதாரணமாக, ரூ.10 லட்சத்தை முதலீடு செய்தால், 115 மாதங்களுக்குப் பிறகு ரூ.20 லட்சமாக கிடைக்கும்.
இந்தியாவில் வசிக்கும் தனிநபர்கள் KVP திட்டத்தில் முதலீடு செய்யலாம். 10 வயதிற்கு மேற்பட்டவர்கள் தனது பெயரில் KVP கணக்கைத் தொடங்கலாம்.
மேலும், விதிமுறைகளுக்கு உட்பட்டு தனிநபர் அல்லது கூட்டுக் கணக்காகவும் தொடங்கலாம்.
பொதுவாக, KVP கணக்கை குறிப்பிட்ட நிபந்தனைகளுக்கு உட்பட்டு முதிர்வுக்கு முன்பே முடித்துக்கொள்ளலாம்.

முதிர்வுக்கு முன்பே பணத்தை எடுத்தால், கிடைக்கும் தொகை மற்றும் வட்டி, நடைமுறையில் உள்ள விதிகளின்படி கணக்கிடப்படும்.
அருகிலுள்ள அஞ்சலகத்திற்குச் சென்று KVP கணக்கைத் தொடங்கலாம்.
விண்ணப்பப் படிவத்துடன் ஆதார் மற்றும் PAN போன்ற KYC ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டும்.
தேவையான விவரங்களைப் பூர்த்தி செய்து முதலீட்டுத் தொகையைச் செலுத்திய பிறகு கணக்கு தொடங்கப்படும்.
முதலீடு தொடர்பான ஆவணங்கள் மற்றும் சான்றிதழ்களை பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |