மாதம்தோறும் ரூ.5550 வட்டி பெற வேண்டுமா? Post Office-ன் இந்த திட்டத்தில் முதலீடு செய்யுங்கள்
தபால் அலுவலக திட்டத்தில் ஒவ்வொரு மாதமும் ரூ.5550 வட்டி கிடைக்க நீங்கள் இதனை செய்தால் போதும்.
Post Office MIS Scheme
தபால் அலுவலகத்தின் மாதாந்திர வருமானத் திட்டத்தில், முதலீட்டாளர்கள் ஒரு மொத்த தொகையை முதலீடு செய்ய வேண்டும், அதில் உங்களுக்கு ஒவ்வொரு மாதமும் நிலையான வட்டி கிடைக்கும்.
7.4 சதவீத ஆண்டு வட்டி வழங்கப்படும் இந்த திட்டத்தில் குறைந்தபட்சம் ரூ.1000 மற்றும் அதிகபட்சமாக ரூ.9 லட்சம் வரை டெபாசிட் செய்யலாம்.
அதேபோல ஒரு கூட்டுக் கணக்கைத் திறந்தால் அதிகபட்சமாக ரூ.15 லட்சம் வரை டெபாசிட் செய்யலாம். அதிகபட்சமாக 3 பேர் வரை கூட்டுக் கணக்கை திறக்கலாம்.
தபால் நிலையத்தின் MIS திட்டத்தில் மொத்தமாக ரூ.9 லட்சம் முதலீடு செய்தால், ஒவ்வொரு மாதமும் ரூ.5550 நிலையான வட்டி கிடைக்கும். வட்டி பணம் உங்கள் தபால் நிலைய சேமிப்புக் கணக்கில் நேரடியாக டெபாசிட் செய்யப்படும்.
இந்தத் திட்டத்தின் முதிர்வு காலம் 5 ஆண்டுகளுக்கு பிறகு டெபாசிட் செய்த அனைத்துப் பணமும் உங்கள் சேமிப்புக் கணக்கிற்கு மாற்றப்படும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |