மாதாந்திர வருமான திட்டம்.., ரூ.15 லட்சம் முதலீடு செய்தால் மாதம் எவ்வளவு கிடைக்கும்?
போஸ்ட் ஆபிஸ் மாதாந்திர வருமான திட்டம் (POMIS) சேமிப்பிற்கு ஒரு நல்ல தேர்வாக உள்ளது.
இந்த போஸ்ட் ஆபிஸ் மாதாந்திர வருமான திட்டம் மாதந்தோறும் நிலையான வட்டியை வழங்குகிறது.
குறிப்பாக ஓய்வு பெற்றவர்கள் மற்றும் பாதுகாப்பான வருமானத்தை விரும்புபவர்கள் அதிகமாக இதில் முதலீடு செய்கிறார்கள்.
இந்த திட்டத்தில் தனிநபர் கணக்கில் அதிகபட்சம் ரூ.9 லட்சமும், கூட்டு கணக்கில் ரூ.15 லட்சமும் முதலீடு செய்யலாம்.
மேலும், தற்போது இந்த திட்டத்திற்கு ஆண்டுக்கு 7.4% வட்டி வழங்கப்படுகிறது.
ஒருவர் கூட்டு கணக்கில் ரூ.15 லட்சம் முதலீடு செய்தால், மாதத்திற்கு சுமார் ரூ.9,250 வருமானமும், ஆண்டுக்கு சுமார் ரூ.1.11 லட்சம் வட்டி வருமானமாக பெறலாம்.
இந்தக் கணக்கீட்டின்படி, ஒரு முதலீட்டாளர் 5 ஆண்டுகளுக்கு மாதத்திற்கு சுமார் 9,250 ரூபாய் பெறுவார்.

அதாவது, 5 ஆண்டுகளில் வட்டியிலிருந்து மட்டும் கிடைக்கும் மொத்த வருமானம் சுமார் 5,55,000 ரூபாயாக இருக்கும்.
மேலும், தபால் அலுவலக MIS கணக்கை தொடங்கிய ஒரு ஆண்டுக்குள் மூட முடியாது.
3 ஆண்டுகளுக்குள் அல்லது 3 ஆண்டுகள் நிறைவடைவதற்கு முன்பாக கணக்கு மூடப்பட்டால், முதலீட்டு தொகையில் 2% கழித்து மீதம் வழங்கப்படும்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |