போஸ்ட் ஆபிஸ் திட்டம்.., ஒருமுறை முதலீடு செய்தால் மாதம் ரூ.9,250 பெறலாம்
Post Office MIS Scheme Details- பாதுகாப்பான முதலீட்டையும், நிலையான வருமானத்தையும் விரும்புபவர்களுக்கு அஞ்சல் அலுவலக சேமிப்பு திட்டங்கள் உதவியாக உள்ளன.
அரசு ஆதரவுடன் செயல்படுத்தப்படும் இத்திட்டங்களில், குறைந்த தொகையில் முதலீடு செய்ய முடியும்.
அந்தவகையில், போஸ்ட் ஆபிஸின் மாதாந்திர வருமானத் திட்டம் (MIS) முக்கியமானதாக உள்ளது.
இத்திட்டத்தில் ஒருமுறை முதலீடு செய்தால், ஒவ்வொரு மாதமும் வட்டி வருமானத்தைப் பெற முடியும்.
போஸ்ட் ஆபிஸ் சிறு சேமிப்புத் திட்டங்களில் முதலீடு செய்யப்படும் பணத்திற்கு மத்திய அரசின் பாதுகாப்பு உள்ளது.

குறிப்பாக, ஓய்வு பெற்றவர்கள் மத்தியில் போஸ்ட் ஆபிஸ் மாதாந்திர வருமானத் திட்டம் பிரபலமாக உள்ளது.
தற்போது இத்திட்டத்திற்கு ஆண்டுக்கு 7.4 சதவீத வட்டி வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின் முதிர்வுக் காலம் 5 ஆண்டுகள் ஆகும்.
இதில் குறைந்தபட்சம் ரூ.1,000 முதலீடு செய்து கணக்கைத் தொடங்கலாம். தனிநபர் கணக்கு மட்டுமின்றி, கூட்டுக் கணக்கு தொடங்கும் வசதியும் உள்ளது.
இத்திட்டத்தில் தனிநபர் கணக்கில் அதிகபட்சமாக ரூ.9 லட்சம் வரை முதலீடு செய்யலாம். கூட்டுக் கணக்கில் அதிகபட்சமாக ரூ.15 லட்சம் வரை முதலீடு செய்ய முடியும்.

இந்த திட்டத்தில் தனிநபர் கணக்கில் ரூ.9 லட்சம் முதலீடு செய்தால், ஆண்டுக்கு 7.4 சதவீத வட்டி அடிப்படையில் மாதம் ரூ.5,550 வருமானமாகக் கிடைக்கும்.
அதேபோல், கூட்டுக் கணக்கில் ரூ.15 லட்சம் முதலீடு செய்தால், மாதம் ரூ.9,250 வட்டி வருமானமாகப் பெறலாம்.
இத்திட்டத்தில் கிடைக்கும் வட்டியை மாதந்தோறும் அல்லது காலாண்டு, அரையாண்டு அல்லது ஆண்டுக்கு ஒருமுறை வட்டியை பெற்றுக்கொள்ளும் வசதியும் உள்ளது.
இருப்பினும், கணக்கு தொடங்கிய 1 முதல் 3 ஆண்டுகளுக்குள் முடித்தால், முதலீட்டுத் தொகையில் 2 சதவீதம் பிடித்தம் செய்யப்படும்.
அதேபோல், 3 முதல் 5 ஆண்டுகளுக்குள் கணக்கை முடித்தால் 1 சதவீதம் பிடித்தம் செய்யப்படும்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |