போஸ்ட் ஆபிஸில் ரூ.8 லட்சம் முதலீடு.., மாதம் எவ்வளவு பணம் கிடைக்கும்?
Post office mis scheme- பாதுகாப்பான முதலீட்டையும், நிலையான வருமானத்தையும் விரும்புபவர்களுக்கு அஞ்சல் அலுவலக சேமிப்பு திட்டங்கள் உதவியாக உள்ளன.
அரசு ஆதரவுடன் செயல்படுத்தப்படும் இத்திட்டங்களில், குறைந்த தொகையில் முதலீடு செய்ய முடியும். இந்நிலையில்
அஞ்சலகத்தின் மாதாந்திர வருமானத் திட்டம் (MIS) மிகவும் உதவியாக இருக்கும்.
இந்த திட்டத்தில் ஒரே தவணையாக பணத்தை முதலீடு செய்து, ஒவ்வொரு மாதமும் வட்டி வருமானம் பெறலாம்.
இந்தத் திட்டம் பங்குச் சந்தையுடன் தொடர்புடையது அல்ல என்பதால், சந்தை ஏற்ற இறக்கங்களால் வட்டி வருமானத்தில் நேரடி பாதிப்பு ஏற்படாது.

தற்போது இந்தத் திட்டத்திற்கு ஆண்டுக்கு 7.4 சதவீத வட்டி வழங்கப்படுகிறது.
இந்த வட்டி விகிதத்தின்படி, ரூ.8 லட்சம் முதலீடு செய்தால் மாதந்தோறும் எவ்வளவு வருமானம் கிடைக்கும் என்று பார்க்கலாம்.
ரூ.8 லட்சத்தை 5 ஆண்டுகளுக்கு முதலீடு செய்தால், ஆண்டுக்கு 7.4 சதவீத வட்டி அடிப்படையில் மாதந்தோறும் சுமார் ரூ.4,933 கிடைக்கும்.
5 ஆண்டுகளில் மொத்தம் ரூ.2,96,000 வட்டியாகக் கிடைக்கும். முதலீட்டுக் காலம் முடிந்ததும், அசல் தொகையான ரூ.8 லட்சமும் திரும்பக் கிடைக்கும்.
இதன்படி, 5 ஆண்டுகளில் அசல் மற்றும் வட்டி சேர்த்து மொத்தம் ரூ.10,96,000 பெறலாம்.

இந்த திட்டத்தில் குறைந்தபட்சம் ரூ.1,000 முதலீடு செய்து கணக்கைத் தொடங்கலாம். தனிநபர் கணக்கில் அதிகபட்சமாக ரூ.9 லட்சமும், கூட்டுக் கணக்கில் ரூ.15 லட்சமும் முதலீடு செய்யலாம்.
முதலீட்டுக்கான வட்டித் தொகை ஒவ்வொரு மாதமும் அஞ்சலக சேமிப்புக் கணக்கில் வரவு வைக்கப்படும்.
இருப்பினும், முதலீடு செய்வதற்கு முன்பு அப்போதைய வட்டி விகிதத்தைச் சரிபார்க்க வேண்டும்.
வட்டிக்கு விதிக்கப்படும் வரிகள் மற்றும் முதிர்வுக் காலத்திற்கு முன்பே பணத்தைத் திரும்பப் பெறுவதற்கான விதிமுறைகளையும் தெரிந்துகொள்ள வேண்டும்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |