Post office திட்டம்: ரூ.9,000 முதலீடு.., வட்டி மட்டும் ரூ.4.40 லட்சம் கிடைக்கும்
பொதுமக்களுக்கு பாதுகாப்பான சேமிப்பு வாய்ப்பாக தபால் நிலையத்தின் தொடர் வைப்புத் திட்டம் (Post Office RD Scheme) இருந்து வருகிறது.
சிறிய தொகையை மாதந்தோறும் சேமித்து, நீண்ட காலத்தில் பெரிய நிதியாக மாற்ற விரும்புவோருக்கு இது சிறந்த தேர்வாக கருதப்படுகிறது.
இந்த திட்டத்தில் வெறும் ரூ.100-இல் இருந்து கணக்கைத் தொடங்கலாம். தற்போது அரசு வழங்கும் வட்டி விகிதம் 6.7% ஆக உள்ளது.

18 வயது அல்லது அதற்கு மேற்பட்டவர்கள் அருகிலுள்ள தபால் நிலையத்தில் எளிதாக கணக்கைத் திறக்கலாம்.
இந்த RD திட்டத்தின் காலம் 5 ஆண்டுகள். தேவையெனில் மேலும் 5 ஆண்டுகள் நீட்டிக்கவும் வசதி உள்ளது.
3 ஆண்டுகள் கழித்து கணக்கை முன்கூட்டியே மூடும் வாய்ப்பும் உள்ளது.
மேலும், ஒரு வருடம் முடிந்த பிறகு சேமித்த தொகையின் 50% வரை கடனாக பெறலாம்.

உதாரணமாக, தினமும் ரூ.300 சேமித்தால் மாதம் ரூ.9,000 ஆகும். இதை தொடர்ந்து 10 ஆண்டுகள் முதலீடு செய்தால், மொத்தம் ரூ.10.80 லட்சம் சேமிப்பாகும்.
இதற்கு வட்டியுடன் சேர்த்து சுமார் ரூ.15.20 லட்சம் கிடைக்கும். அதாவது, வட்டியாக மட்டும் ரூ.4.40 லட்சம் வருமானம் பெறலாம்.
அரசு ஆதரவு மற்றும் பாதுகாப்பு காரணமாக, இந்த திட்டம் குழந்தைகள், பெண்கள் மற்றும் முதியவர்களுக்கு நம்பகமான முதலீடாக பார்க்கப்படுகிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |