post office: மாதம் ரூ.1,000 முதலீடு.., 5 ஆண்டுகளில் எவ்வளவு பணம் கிடைக்கும்?
பொதுவாக, பாதுகாப்பான முதலீட்டை விரும்புபவர்களின் முதல் தேர்வாக தபால் நிலைய சேமிப்பு திட்டங்கள் உள்ளன.
பாதுகாப்பான முதலீட்டை விரும்புபவர்களுக்கு போஸ்ட் ஆபிஸ் தொடர் வைப்பு (RD) திட்டம் சிறந்த தேர்வாகும்.
இந்த திட்டத்தில் ஒவ்வொரு மாதமும் குறிப்பிட்ட தொகையை முதலீடு செய்து, 5 ஆண்டுகள் கழித்து வட்டியுடன் நல்ல தொகையைப் பெறலாம்.
தற்போது இந்த தொடர் வைப்பு திட்டத்திற்கு ஆண்டுக்கு 6.70% வட்டி வழங்கப்படுகிறது.
இந்த திட்டத்தில் மாதம் ரூ.1,000 முதலீடு செய்தால், 5 ஆண்டுகளில் மொத்த முதலீடு ரூ.60,000 கிடைக்கும். முதிர்வு காலத்தில் வட்டியுடன் சுமார் ரூ.71,000 கிடைக்கும்.
அதேபோல், மாதம் ரூ.1,500 முதலீடு செய்தால், 5 ஆண்டுகளில் ரூ.90,000 முதலீடு செய்யப்படும். முதிர்வு காலத்தில் சுமார் ரூ.1.07 லட்சம் பெறலாம்.
இந்த திட்டத்திற்கான கணக்கை அருகிலுள்ள தபால் நிலையத்தில் தேவையான ஆவணங்களுடன் எளிதாகத் தொடங்கலாம்.
பாதுகாப்பான சேமிப்பு, நிலையான வட்டி மற்றும் சிறிய தொகையில் முதலீடு செய்யும் வசதி ஆகியவை இந்த திட்டத்தின் சிறப்பம்சமாகும்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |