Post office: ரூ.3,500 முதலீடு.., 60 மாதங்களுக்கு பின் எவ்வளவு பணம் கிடைக்கும்?
போஸ்ட் ஆபிஸ்(Post office) பல்வேறு சேமிப்பு திட்டங்களை வழங்கி வருகிறது.
சிறியவர்கள் முதல் மூத்த குடிமக்கள் வரை அனைவருக்கும் ஏற்ற திட்டங்கள் இதில் உள்ளன.
அரசு ஆதரவு இருப்பதால், மக்கள் இந்த திட்டங்களில் முதலீடு செய்வதை அதிகம் விரும்புகின்றனர்.
நிலையான வைப்பு (FD), தொடர் வைப்பு (RD), பொது வருங்கால வைப்பு நிதி (PPF), மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம், குழந்தைகள் சேமிப்பு திட்டம் உள்ளிட்ட பல திட்டங்கள் போஸ்ட் ஆபிஸில் கிடைக்கின்றன.
அந்தவகையில், இதில் தொடர் வைப்பு (RD) திட்டம் நடுத்தர வர்க்கத்தினருக்கு சிறந்ததாக கருதப்படுகிறது.
இதில் மாதந்தோறும் சிறிய தொகையை சேமித்து, காலப்போக்கில் பெரிய தொகையை உருவாக்கலாம். இந்த RD திட்டத்தில் ஆண்டுக்கு 6.7% வட்டி வழங்கப்படுகிறது.

இந்த வட்டி மூன்று மாதங்களுக்கு ஒருமுறை கூட்டு வட்டி முறையில் கணக்கிடப்படுகிறது. இதனால் சேமிப்பு தொகை வேகமாக அதிகரிக்கும்.
உதாரணமாக, ஒருவர் மாதம் ரூ.3,500 சேமித்தால், 5 ஆண்டுகளில் மொத்த முதலீடு ரூ.2,10,000 ஆகும்.
அதாவது, காலம் முடிவில் ரூ.2,49,776 கிடைக்கும். இதில் ரூ.39,776 வரை வட்டி வருமானம் கிடைக்கும்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |