போஸ்ட் ஆபிஸ் திட்டம்.., மாதம் ரூ. 2000 சேமித்தால் 5 ஆண்டுகளில் ரூ.1.42 லட்சம் கிடைக்கும்
பொதுவாக, பாதுகாப்பான முதலீட்டை விரும்புபவர்களின் முதல் தேர்வாக தபால் நிலைய சேமிப்பு திட்டங்கள் உள்ளன.
அதன்படி, தபால் அலுவலகத்தின் தொடர் வைப்பு நிதி திட்டம் பாதுகாப்பான முதலீட்டு திட்டங்களில் ஒன்றாகும்.
மத்திய அரசின் உத்தரவாதம் இருப்பதால், முதலீட்டாளர்கள் நம்பிக்கையுடன் தொடர் வைப்பு நிதி திட்டத்தில் பணத்தை சேமிக்கலாம்.
2026 ஜூலை- செப்டம்பர் காலாண்டுக்கு இந்தத் திட்டத்தின் வட்டி விகிதம் ஆண்டுக்கு 6.7 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்த தொடர் வைப்பு நிதி திட்டத்தின் வட்டி 3 மாதங்களுக்கு ஒருமுறை கூட்டு வட்டி முறையில் கணக்கிடப்படுகிறது.
மேலும், இந்த திட்டத்தில் மாதம் ரூ. 2000 வீதம் 5 ஆண்டுகள் சேமித்தால், மொத்த முதலீடு ரூ.120000 ஆகும்.
திட்டம் நிறைவடையும் போது சுமார் ரூ.1,42,732 கிடைக்கும். அதாவது, வட்டியாக மட்டும் சுமார் ரூ.22,732 கிடைக்கும்.
போஸ்ட் ஆபிஸ் RD திட்டத்தில் மாதம் குறைந்தபட்சம் ரூ.100 முதல் முதலீடு செய்யலாம். அதிகபட்ச முதலீட்டுக்கு எந்த வரம்பும் இல்லை.
இந்தத் திட்டத்தின் காலம் 5 ஆண்டுகள். இருந்தாலும் 3 ஆண்டுகள் முடிந்த பிறகு தேவையெனில் கணக்கை முன்கூட்டியே மூடலாம்.
இந்தத் திட்டம் வருமான வரிச் சட்டத்தின் 80C பிரிவின் கீழ் வரிவிலக்கு கிடையாது.
அஞ்சல் நிலையத்தில் ஆதார், PAN உள்ளிட்ட ஆவணங்களுடன் இந்த தொடர் வைப்பு நிதி திட்டத்தின் கணக்கைத் தொடங்கலாம்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |