Post office: மாதம் ரூ.10,000 செலுத்தினால் 60 மாதங்களுக்கு பின் எவ்வளவு கிடைக்கும்?
இன்றைய காலக்கட்டத்தில் எதிர்கால நிதி பாதுகாப்பு மிகவும் அவசியமாகியுள்ளது.
மருத்துவ செலவுகள், குழந்தைகளின் கல்வி, ஓய்வூதியம் போன்ற தேவைகளுக்காக முன்கூட்டியே சேமிப்பை தொடங்குவது சிறந்தது .
இந்நிலையில், அரசாங்கத்தின் கீழ் செயல்படும் தபால் அலுவலக RD (Recurring Deposit) திட்டம் பாதுகாப்பான சேமிப்பு வாய்ப்பாக உள்ளது.
RD என்பது மாதந்தோறும் ஒரு நிலையான தொகையை சேமித்து, காலாவதியில் வட்டியுடன் பெரிய தொகை பெறும் திட்டமாகும்.
இந்த திட்டத்தில் மாதம் ரூ.100 முதல் ரூ.500, ரூ.1,000 அல்லது அதற்கு மேல் தொகையையும் தேர்வு செய்து சேமிக்கலாம்.
5 ஆண்டுகள் தொடர்ந்து சேமித்தால், காலாண்டு அடிப்படையில் கூட்டு வட்டி வழங்கப்படுகிறது.
உதாரணமாக, மாதம் ரூ.10,000 சேமித்தால், 5 ஆண்டுகளில் சுமார் ரூ.7.13 லட்சம் கிடைக்கும்.
2026 ஏப்ரல்- ஜூன் காலாண்டுக்கு வட்டி விகிதம் ஆண்டு 6.7% ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த வட்டி மூன்று மாதத்திற்கு ஒருமுறை கணக்கிடப்படுகிறது.
ஒரு ஆண்டுக்கு பிறகு, சேமித்த தொகையின் 50% வரை கடன் பெறும் வசதியும் உள்ளது.
இந்த RD கணக்கு ஆரம்பத்தில் 5 ஆண்டுகள் காலத்திற்கு இருக்கும். தேவையெனில் மேலும் 5 ஆண்டுகள் நீட்டிக்கலாம்.
இத்திட்டத்தில் மாதந்தோறும் தொகை செலுத்த வேண்டும். மேலும், வைப்புத் தேதி தவறவிட்டால், அபராதம் விதிக்கப்படும்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |