Post office திட்டம் : மனைவி பெயரில் ரூ.5 லட்சம் முதலீடு.., எவ்வளவு வருமானம் கிடைக்கும்?
பொதுவாக, பாதுகாப்பான முதலீட்டை விரும்புபவர்களின் முதல் தேர்வாக தபால் நிலைய சேமிப்பு திட்டங்கள் உள்ளன.
அந்தவகையில், மனைவி பெயரில் முதலீடு செய்ய விரும்புபவர்களுக்கு, போஸ்ட் ஆபிஸில் இரண்டு முக்கிய திட்டங்கள் உள்ளன.
டைம் டெபாசிட் (FD)
அதன்படி, 5 ஆண்டு போஸ்ட் ஆபிஸ் டைம் டெபாசிட் (FD) ஆகும். இதில் தற்போது 7.5% வட்டி வழங்கப்படுகிறது.
இந்த திட்டத்தில் ரூ.5 லட்சம் முதலீடு செய்தால், 5 ஆண்டுகளில் சுமார் ரூ.2,26,647 வட்டி கிடைக்கும்.

மேலும், முதிர்வு கால முடிவில், அசல் மற்றும் வட்டி சேர்த்து ரூ.7,26,647 பெறலாம்.
இந்த டைம் டெபாசிட் திட்டத்திற்கு, வருமான வரிச் சட்டம் பிரிவு 80Cன் கீழ் ரூ.1.5 லட்சம் வரை வரிச் சலுகையும் கிடைக்கும்.
மாதாந்திர வருமானத் திட்டம் (MIS)
மாதந்தோறும் வருமானம் வேண்டுமெனில், போஸ்ட் ஆபிஸ் மாதாந்திர வருமானத் திட்டம் (MIS) சிறந்த தேர்வாக இருக்கும்.
7.4% வட்டி வழங்குகின்ற இந்த திட்டத்தில் ரூ.5 லட்சம் முதலீடு செய்தால், மாதம் ரூ.3,083 வருமானம் கிடைக்கும்.
மேலும், ஆண்டுக்கு ரூ.37,000, 5 ஆண்டுகளில் மொத்தம் ரூ.1,85,000 வட்டி வருமானம் கிடைக்கும்.
குறிப்பாக இந்த மாதாந்திர வருமானத் திட்டத்தின் முதிர்வு காலத்தில் ரூ.5 லட்சம் அசல் தொகையும் திருப்பி வழங்கப்படும்.
இந்த திட்டங்கள் மத்திய அரசு ஆதரவுடன் செயல்படுவதால் இது முற்றிலும் பாதுகாப்பான திட்டங்கள் ஆகும்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |