Post Office சேமிப்பு திட்டங்கள்- முழு தகவல்

By Yashini Feb 27, 2024 09:49 AM GMT
Report

மாதந்தோறும் செலவுகள் இருப்பதை போலவே, செலவில் ஒரு பகுதியாவது நிதி சேமிப்பு இருக்க வேண்டும்.

நிதி சேமிப்பு செய்ய நினைப்பவர்களாக இருந்தால்,அவர்களுக்கு ஏற்ற சிறு சேமிப்பு திட்டங்கள் தபால் துறையில் இருக்கிறது.

தபால் அலுவலக சேமிப்பு திட்டங்கள் பல நம்பகமான மற்றும் ஆபத்து இல்லாத முதலீட்டு வருமானங்களை வழங்குகிறது.

இவை நிலையான அல்லது தொடர் வைப்பு கொள்கைகள் மற்றும் கவர்ச்சிகரமான நிலையான வட்டி விகிதங்களை வழங்குகின்றன.

Post Office சேமிப்பு திட்டங்கள்- முழு தகவல் | Post Office Scheme In Tamil

இதில் முதலீடு செய்த பணத்துக்கு உத்தரவாதமும், பாதுகாப்பும், பணப்பலனும், வட்டி விகிதமும், ஓய்வூதிய பலனும், முதலீட்டாளர்களுக்கு பன்மடங்கு நன்மையை தரக்கூடியது.   

இது நேரடியாக மத்திய அரசின் கீழ் இருப்பதால் பாதுகாப்பானதாகக் கருதப்படுகிறது. அந்தவகையில், தபால் அலுவலகத்தில் இருக்கும் சில சேமிப்பு திட்டங்கள் குறித்து விவரமாக பார்க்கலாம்.

பெண்கள் சம்மான் சேமிப்புச் சான்றிதழ் (Mahila Samman Savings Certificate) 

மகிளா சம்மான் சேமிப்பு சான்றிதழ் எனப்படும் "பெண்கள் சம்மான் சேமிப்புச் சான்றிதழ்" திட்டமானது, பெண் குழந்தைகளுக்காக துவங்கப்பட்ட திட்டமாகும்.

இதில், 3 மாதத்துக்கு ஒருமுறை வட்டி, கணக்கில் வரவு வைக்கப்படும். இந்தத் திட்டத்தில் டெபாசிட் தொகை, முதலீடு செய்த தேதியிலிருந்து 2 வருடங்கள் கழித்து முதிர்வடையும்.

Post Office சேமிப்பு திட்டங்கள்- முழு தகவல் | Post Office Scheme In Tamil

முதலீட்டாளர்கள் 2 வருடங்களுக்கு முன்பே இறந்துவிட்டால், அப்போது முழுத்தொகையும் வழங்கப்பட்டு விடும்.

பெண்கள் யார் வேண்டுமானாலும் இந்த கணக்கை துவங்கலாம். வயது வரம்பு எதுவும் கிடையாது. அதிகபட்சமாக ரூ. 2 லட்சம் முதலீடு செய்யலாம். 

மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம் (Senior Citizen Saving Scheme)

இந்த சேமிப்புத் திட்டத்தின் கீழ், ஆண்டுதோறும் 8.2% சதவீத வட்டி வழங்கப்படுகிறது. இத்திட்டம் குறிப்பாக 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கானது.

விஆர்எஸ் என்று சொல்லப்படும் விருப்ப ஓய்வு பெற்றவர்களும் இந்த திட்டத்தில் பயன்பெறலாம்.

இதில் அதிகபட்சமாக ரூ.15 லட்சம் வரை டெபாசிட் செய்யலாம். இந்த கணக்கில் ஒரு முறை மட்டுமே பணத்தை டெபாசிட் செய்ய முடியும்.  

Post Office சேமிப்பு திட்டங்கள்- முழு தகவல் | Post Office Scheme In Tamil

இதன் கீழ், உங்கள் பணம் சுமார் 9 வருடங்கள் மற்றும் 7 மாதங்களில் இரட்டிப்பாகிறது. அஞ்சலக சேமிப்புகளில் அதிக வட்டியுடைய திட்டமாக இது பார்க்கப்படுகிறது.

கணக்கு தொடங்கிய நாளிலிருந்து 5 வருடங்களுக்கு பிறகு வைப்புத் தொகை முதிர்ச்சியடைகிறது. இந்த திட்டத்தில் அதிகபட்சம் 30 லட்சம் வரை சேமிக்கலாம்.  

சுகன்யா சம்ரிதி யோஜனா திட்டம்(Sukanya Samriddhi Yojana Scheme)

 பெண் குழந்தைகளின் எதிர்காலத்துக்கு அரசாங்கம் வழங்கும் சேமிப்புத் திட்டம்தான் இந்த செல்வ மகள் சேமிப்பு திட்டம்.

இத்திட்டத்தில் 10 வயதுக்குட்பட்ட பெண் குழந்தைகளின் பெயரில் அவரது பெற்றோர் அல்லது பாதுகாவலர் குறைந்தபட்சம் தொகையாக ரூ.250 கணக்கை தொடங்கலாம்.

Post Office சேமிப்பு திட்டங்கள்- முழு தகவல் | Post Office Scheme In Tamil

இந்தக் கணக்கை ஒரு குடும்பத்தில் அதிகபட்சம் இரண்டு பெண் குழந்தைகளுக்குத் திறக்கலாம். சிறுமிக்கு 18 வயது ஆனதும், அவர் அதற்கு உரிமையாளராவார்.

இந்த திட்டத்தின் முதலீட்டு காலம் 15 ஆண்டுகள் மற்றும் முதிர்வு காலம் 21 ஆண்டுகள். ஒரு மொத்த தொகை அல்லது ஒரு மாத அடிப்படையில் செலுத்தலாம்.

டெபாசிட் செய்பவர் ஒவ்வொரு நிதியாண்டிலும் குறைந்தபட்சம் ரூ.250 முதல் அதிகபட்சமாக ரூ.1.5 லட்சம் வரை டெபாசிட் செய்யலாம்.

சேமிப்பு திட்டம் (Saving Scheme)

தபால் அலுவலகத்தின் சேமிப்பு திட்டத்தில் செலுத்தக்கூடிய சேமிப்புக் கணக்கிற்கு முதிர்வு என்பது கணக்கு தொடங்கப்பட்ட நாளிலிருந்து 21 ஆண்டுகளில் நிறைவு பெறும்.

Post Office சேமிப்பு திட்டங்கள்- முழு தகவல் | Post Office Scheme In Tamil

ஆனால் கணக்குத் தொடங்கியதிலிருந்து 15 வருடங்கள் வரை மட்டும்தான் சேமிப்புத் தொகையைச் செலுத்த முடியும்.

குறிப்பாக நீங்கள் செலுத்தும் பணத்திற்கு 8 சதவீதம் வட்டியும் வழங்கப்படும். 

நிலையான வைப்பு தொகை (Fixed Deposit Amount)

இந்த திட்டத்தின்கீழ், வங்கி அல்லது வங்கி சாராத நிதி நிறுவனங்களில் நிதியை குறிப்பிட்ட காலகட்டத்திற்கு வைப்பு வைக்கவேண்டும்.

முதிர்வு காலம் வரை அந்த நிதியை வங்கியில் இருந்து எடுக்க முடியாது.

Post Office சேமிப்பு திட்டங்கள்- முழு தகவல் | Post Office Scheme In Tamil

வங்கிகளில் நிலையான வைப்பு தொகைக்கான காலத்தை 7 நாட்கள் முதல் 10 ஆண்டுகளாக நாமே தேர்வு செய்துகொள்ளலாம்.

ஒருவேளை, முதிர்வு காலத்திற்கு முன்னரே வங்கியில் இருந்து திரும்ப பெற வேண்டுமென்றால் அதற்கு அபராதம் செலுத்த வேண்டி இருக்கும்.   

சேமிப்பு கணக்கு (Savings Account)

18 வயது பூர்த்தியடைந்தவர்கள் அல்லது மூத்த குடிமக்கள் இந்த சேமிப்பு கணக்கை தொடங்கலாம். 10 வயதுடைய மைனர் எனில் அவர்களுக்கு பாதுகாவலர் இருக்க வேண்டும். ​​

இந்தக் கணக்கிற்கு ஆண்டுக்கு 4% வட்டி விகிதம் வழங்கப்படுகிறது.

ஒவ்வொரு மாதமும் 10-ம் திகதி மற்றும் கடைசி நாளின் குறைந்தபட்ச இருப்புத் தொகையின் அடிப்படையில் வட்டி கணக்கிடப்படும்.

Post Office சேமிப்பு திட்டங்கள்- முழு தகவல் | Post Office Scheme In Tamil

இந்தக் காலக்கட்டத்தில், மீதித் தொகை ரூ.500க்குக் குறைவாக இருந்தால், வட்டி எதுவும் வரவு வைக்கப்படாது என்று தபால் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், கணக்கு பராமரிப்பு கட்டணமாக ரூ. 50 எடுக்கப்படும். கணக்கு இருப்பு பூஜ்ஜியமாக மாறினால் கணக்கு தானாகவே மூடப்படும்.

நேர வைப்பு திட்டம் (Time Deposit Account)

அஞ்சலகத் திட்டத்தில் பணத்தை முதலீடு செய்வதன் மூலம் இரட்டிப்பாக்க விரும்பினால், இந்த நேர வைப்பு திட்டம் மிகவும் பயனுள்ளது.

முதல் ஆண்டு 6.8 சதவீதமும் இரண்டாம் ஆண்டு நேர வைப்புகளுக்கு ஆண்டுதோறும் 6.9 சதவீதம் வட்டி கிடைக்கும். பணம் சுமார் 13 ஆண்டுகளில் இரட்டிப்பாகும்.

Post Office சேமிப்பு திட்டங்கள்- முழு தகவல் | Post Office Scheme In Tamil

இது தவிர, 5 வருட கால வைப்புத்தொகைக்கு 7.5 சதவிகிதம் வட்டி கிடைக்கும், இதில் உங்கள் பணம் சுமார் 10 வருடங்கள் மற்றும் 8 மாதங்களில் இரட்டிப்பாகும்.

மாதாந்திர வருவாய் திட்டம் (Monthly Income Scheme) 

இந்த திட்டத்தில் ஒருவர் ரூ.9 லட்சம் வரை தனியாகவும், ரூ.15 லட்சம் வரை கூட்டாகவும் அதிகபட்சமாக 5 ஆண்டுகளுக்கு சேமித்து வைக்கலாம்.

இத்திட்டத்தின் கீழான சேமிப்புகளுக்கு ஆண்டுக்கு 7.4% வட்டி மாதந்தோறும் என்ற அடிப்படையில் வழங்கப்படுகிறது.

Post Office சேமிப்பு திட்டங்கள்- முழு தகவல் | Post Office Scheme In Tamil

உதாரணத்துக்கு நீங்கள் ரூ.4.5 லட்சம் தொகையை 5 ஆண்டுகளுக்கு முதலீடு செய்திருந்தால் உங்களுக்கு மாதந்தோறும் ரூ.2,475 வட்டியாகக் கிடைக்கும்.

இத்திட்டத்தில் முதலீடு செய்ய 18 வயதை தாண்டியவராக இருக்க வேண்டும். உங்கள் மைனர் வாரிசின் பெயரிலும் ஆரம்பிக்கலாம்.  

பொது வருங்கால வைப்பு நிதி (Public Provident Fund)

இந்த திட்டத்தில்7.1% வட்டி ஆண்டுதோறும் கிடைக்கும், இதன் கீழ் உங்கள் பணம் சுமார் 10 வருடங்கள் மற்றும் ஒரு மாதத்தில் இரட்டிப்பாகும்.

இதற்கு வரி விலக்கும் உண்டு என்பதால் கூடுதல் சிறப்புடைய சிறுசேமிப்பு திட்டமாக பார்க்கப்படுகிறது. 

Post Office சேமிப்பு திட்டங்கள்- முழு தகவல் | Post Office Scheme In Tamil

தேசிய சேமிப்பு சான்றிதழ் திட்டம் (National Savings Certificates) 

இந்த திட்டத்தில் வட்டி ஆண்டுதோறும் 7.7 சதவிகிதத்தில் கிடைக்கும், இதில் முதலீடு செய்த 5 மாதங்களுக்குப் பிறகு சுமார் 10 வருடங்களுக்கு பணம் இரட்டிப்பாகும்.

Post Office சேமிப்பு திட்டங்கள்- முழு தகவல் | Post Office Scheme In Tamil

இதில் குறைந்தபட்சம் ரூ.1000 முதலீடு செய்யலாம். கையிலிருக்கும் பணத்தை பாதுகாப்பான வழியில் முதலீடு செய்ய ஏற்றதாக இந்த திட்டம் இருக்கும்.  

கிசான் விகாஸ் பத்ரா திட்டம் (Kisan Vikas Patra Scheme)

இந்த தபால் அலுவலக திட்டம் ஆண்டுதோறும் 7.5 சதவீத வட்டி கிடைக்கும்.

Post Office சேமிப்பு திட்டங்கள்- முழு தகவல் | Post Office Scheme In Tamil

இந்த திட்டத்தில் நீங்கள் பணத்தை முதலீடு செய்தால், உங்கள் பணத்தை 10 வருடங்கள் மற்றும் 4 மாதங்களில் இரட்டிப்பாக்கலாம். 

பொன்மகன் சேமிப்பு திட்டம் (ponmagan scheme)

ஆண் குழந்தைகளுக்காக தபால் நிலையங்களில் இருக்கும் சேமிப்புத் திட்டம்தான் பொன்மகன் சேமிப்பு திட்டம்.

இத்திட்டத்தில், வருடம் ஒன்றுக்கு 12 முறை என குறைந்தபட்சம் 500 ரூபாய் முதல் அதிகபட்சம் 1.5 லட்சம் ரூபாய் வரை இத்திட்டத்தில் முதலீடு செய்யலாம்.

Post Office சேமிப்பு திட்டங்கள்- முழு தகவல் | Post Office Scheme In Tamil

இத்திட்டத்தில் முதலீடு செய்வதற்கு குழந்தைகளின் வயது 10க்கு மேல் இருந்தால், அவர்களின் பெயரிலேயே திட்டத்தை தொடங்கிக்கொள்ளலாம்.

அதேசமயம் குழந்தைக்கு 10 வயதுக்கு கீழ் இருந்தால் ஜாயிண்ட் அக்கவுண்ட் மூலம் தொடங்கலாம்.   

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்.  


2ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை, ஆத்தியடி பருத்தித்துறை, திருகோணமலை, கோண்டாவில், வெள்ளவத்தை, New Jersey, United States, Toronto, Canada

14 May, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Biel/Bienne, Switzerland, Brampton, Canada

17 Apr, 2025
1ஆம் ஆண்டு நினைவஞ்சலி 14ஆம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, கந்தர்மடம்

12 May, 2015
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

ஏழாலை தெற்கு, Thun, Switzerland

11 Apr, 2025
மரண அறிவித்தல்

மயிலிட்டி, Fresnes, France

17 Apr, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, London, United Kingdom

06 Apr, 2025
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இளவாலை, சுண்டிக்குளி, Markham, Canada

20 Mar, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, மலேசியா, Malaysia, ஜேர்மனி, Germany

22 Apr, 2021
நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், நீர்கொழும்பு

02 Apr, 2005
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர், மல்லாவி யோகபுரம்

22 Apr, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, தெல்லிப்பழை, Rochester, United States

21 Apr, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கந்தர்மடம், கொழும்பு

20 Apr, 2025
மரண அறிவித்தல்

சுண்டிக்குளி, Grevenbroich, Germany

19 Apr, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, பிரான்ஸ், France

15 Apr, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, அல்லைப்பிட்டி

21 Apr, 2013
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, Rosehill, United Kingdom

15 Apr, 2020
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, வவுனியா, Auckland, New Zealand, சிட்னி, Australia

18 Apr, 2025
மரண அறிவித்தல்

வடலியடைப்பு, காங்கேசன்துறை, கொழும்பு, Markham, Canada

18 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி கிழக்கு, வல்வெட்டி, அல்வாய், தெஹிவளை

01 May, 2024
மரண அறிவித்தல்

சரவணை மேற்கு வேலணை, Ottawa, Canada, Montreal, Canada

18 Apr, 2025
மரண அறிவித்தல்

ஆத்திமோட்டை, Hayes, United Kingdom

18 Apr, 2025
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

பண்ணாகம், நியூ யோர்க், United States

18 Mar, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Drancy, France

15 Apr, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, சண்டிலிப்பாய், கொழும்பு

19 Apr, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, London, United Kingdom, Wales, United Kingdom

19 Apr, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கரம்பொன்

05 May, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வட்டக்கச்சி, Mississauga, Canada

01 May, 2024
மரண அறிவித்தல்

இணுவில் மேற்கு, பிரான்ஸ், France

12 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பிரான்ஸ், France

18 Apr, 2020
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தெற்கு, Jaffna, Chur, Switzerland

16 Apr, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி மேற்கு

13 Apr, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

20 Apr, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US