ரூ.5 லட்சம் முதலீடு செய்து ரூ.15 லட்சம் பெறக்கூடிய Post Office திட்டம் பற்றி தெரியுமா?
அஞ்சல் அலுவலக திட்டம் ஒன்றில் ரூ.5 லட்சம் முதலீடு செய்து ரூ.15 லட்சம் வருமானம் பெறலாம். அது என்ன திட்டம் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
என்ன திட்டம்?
தற்போதைய காலத்தில் குழந்தை பிறந்தவுடன் சில பெற்றோர்கள் பிபிஎஃப், ஆர்டி, போன்ற பல திட்டங்களில் முதலீடு செய்யத் தொடங்குகிறார்கள். இது தவிர, சிலர் குழந்தையின் எதிர்காலத் தேவைகளைப் பூர்த்தி செய்ய நிலையான வைப்புத்தொகையை டெபாசிட் செய்ய திட்டமிட்டுள்ளனர்.
அந்தவகையில், குறைந்த நேரத்தில் அதிக வருமானம் தரும் தபால் நிலையத்தின் ஒரு திட்டத்தைப் பற்றி பார்க்கலாம். இத்திட்டத்தின் கீழ், ரூ.5 லட்சம் முதலீடு செய்து 15 லட்சம் ரூபாய் வரை சம்பாதிக்கலாம்.
நீங்கள் ஒரு மொத்த தொகையை முதலீடு செய்ய விரும்பினால், போஸ்ட் ஆபிஸ் டெர்ம் டெபாசிட் (Post Office Term Deposit ) அதாவது போஸ்ட் ஆஃபீஸ் எஃப்டி (Post Office FD) உங்களுக்கு சிறந்த தேர்வாகும்.
தபால் அலுவலகத்தின் இந்தத் திட்டத்தில், 5 வருட FDயில் நல்ல வருமானம் பெறப்படுகிறது. இது வங்கிகளை விட சிறந்த வட்டியை வழங்குகிறது. அதாவது ரூ. 5,00,000 முதலீடு செய்தால், 180 மாதங்களில் 15,00,000 பெறலாம்.
Post Office FD Interest Rates
வங்கிகளைப் போலவே, அஞ்சலகங்களிலும் வெவ்வேறு காலகட்டங்களுக்கான FD விருப்பம் உள்ளது. ஒவ்வொரு காலத்திற்கும் வெவ்வேறு வட்டி விகிதங்கள் வழங்கப்படுகின்றன.
* ஒரு வருட FD - 6.9% வருடாந்திர வட்டி
* இரண்டு வருட FD - 7.0% வருடாந்திர வட்டி
* மூன்று ஆண்டு FD - 7.1% வருடாந்திர வட்டி
* ஐந்தாண்டு FD - 7.5% வருடாந்திர வட்டி
ரூ.5 லட்சம் முதலீடு
ரூ. 5 லட்சத்தை 5 ஆண்டுகளுக்கு அஞ்சல் அலுவலக FDயில் டெபாசிட் செய்வதன் மூலம் ரூ.15 லட்சம் வருமானம் பெற முடியும்.
அஞ்சல் அலுவலகம் 5 வருட FDக்கு 7.5 சதவீத வட்டி விகிதத்தை வழங்குகிறது. அதன்படி ரூ.5 லட்சம் முதலீடு செய்தால் 5 ஆண்டுகளுக்குப் பிறகு, முதிர்வுத் தொகை ரூ.7,24,974 ஆக அதிகரிக்கும்.
SBI Special RD திட்டத்தில் தினமும் ரூ.80 சேமித்தால்.., 3 ஆண்டுகளுக்கு பிறகு திரும்ப கிடைக்கும் தொகை எவ்வளவு?
இப்போது, இந்தத் தொகையை திரும்பப் பெற வேண்டியதில்லை. மாறாக, அடுத்த 5 ஆண்டுகளுக்கு மீண்டும் டெபாசிட் செய்ய வேண்டும். அதன்படி, 10 ஆண்டுகளில், 5 லட்சத்துக்கான வட்டி மூலம் ரூ. 5,51,175 பெறுவீர்கள், மேலும் உங்கள் தொகை ரூ.10,51,175 ஆக மாறும்.
அதேபோல, மீண்டும் 5 ஆண்டுகளுக்கு டெபாசிட் செய்ய வேண்டும், அதாவது தலா 5 ஆண்டுகளுக்கு இரண்டு முறை டெபாசிட் வேண்டும். இப்படியாக மொத்தம் 15 ஆண்டுகளுக்கு உங்கள் தொகை டெபாசிட் செய்யப்படும்.
15 -வது ஆண்டில் முதிர்ச்சி அடையும் போது, ரூ.5 லட்சம் முதலீட்டில் வட்டியில் இருந்து 10,24,149 ரூபாய் மற்றும் மொத்தமாக ரூ.15,24,149 கிடைக்கும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |