ஓய்வுக்குப் பின் நிலையான வருமானம்.., அஞ்சலகத்தின் SCSS திட்டம்
ஓய்வு பெற்றவர்களுக்கு பாதுகாப்பான முதலீடு மற்றும் நிலையான வருமானம் வழங்கும் திட்டமாக அஞ்சலகத்தின் மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம் (SCSS) உள்ளது.
இந்தத் திட்டம் மத்திய அரசின் முழு பாதுகாப்புடன் செயல்படுகிறது.
தற்போது 8.2% வட்டி வழங்கப்படுகிறது. இது பல வங்கிகளின் FD வட்டியை விட அதிகம்.

60 வயது பூர்த்தியானவர்கள் இதில் சேரலாம். மேலும், 55 வயதில் விருப்ப ஓய்வு பெற்றவர்கள் மற்றும் 50 வயதில் ஓய்வு பெற்ற பாதுகாப்புப் படை வீரர்களும் சிறப்பு விலக்குடன் இணையலாம்.
ரூ.1,000 முதல் ரூ.30 லட்சம் வரை முதலீடு செய்யலாம். இதில் முதிர்வு காலம் 5 ஆண்டுகள் மேலும், விருப்பப்பட்டால் 3 ஆண்டுகள் நீட்டிக்கலாம்.

ரூ. 25 லட்சம் முதலீடு செய்தால், ஆண்டுக்கு சுமார் ரூ.2.05 லட்சம் வட்டி கிடைக்கும். மாத வருமானமாக சுமார் ரூ.17,000 பெறலாம்.
வட்டி தொகை மூன்று மாதங்களுக்கு ஒருமுறை கணக்கில் செலுத்தப்படும்.
மேலும், வருமான வரிச் சட்டம் 80C பிரிவின் கீழ் ரூ.1.5 லட்சம் வரை வரி விலக்கும் கிடைக்கிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |