Post Office திட்டம்: ஒருமுறை மட்டுமே முதலீடு.., மாதம் ரூ.20,000 கிடைக்கும்
Post office scss scheme details- குடும்பத்தில் மூத்த குடிமக்கள் இருந்தால், அவர்களுக்கான முதலீட்டுத் திட்டங்களைத் தேர்வு செய்வது முக்கியம்.
அந்தவகையில், தபால் நிலையத்தின் மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம் (SCSS) சிறந்த வாய்ப்பாக உள்ளது.
இந்தத் திட்டத்தில் முதலீடு செய்வதன் மூலம் நிலையான வட்டி வருமானத்தை பெறலாம். இந்தத் திட்டத்திற்கு தற்போது ஆண்டுக்கு 8.2 சதவீத வட்டி வழங்கப்படுகிறது.
இதில் முதலீடு செய்யும் பணத்திற்கான வட்டி, ஒவ்வொரு மூன்று மாதங்களுக்கும் ஒருமுறை வழங்கப்படும்.

இதனால், மூத்த குடிமக்கள் தங்களின் அன்றாடச் செலவுகளை சமாளிக்க உதவியாக இருக்கும்.
இந்தத் திட்டத்தில் குறைந்தபட்சம் ரூ.1,000 முதல் முதலீடு செய்யலாம். அதிகபட்சமாக ரூ.30 லட்சம் வரை முதலீடு செய்யலாம்.
ரூ.30 லட்சம் முதலீடு செய்தால், ஆண்டுக்கு ரூ.2,46,000 வட்டி கிடைக்கும். இதன்படி, ஒவ்வொரு மூன்று மாதங்களுக்கும் ரூ.61,500 வட்டியாகப் பெறலாம். இது மாதத்திற்கு சராசரியாக ரூ.20,500 ஆகும்.
இந்த திட்டத்தில் கிடைக்கும் வட்டி வருமானம் சந்தை ஏற்ற இறக்கங்களைப் பொறுத்து மாறாது. மேலும், விதிமுறைகளுக்கு உட்பட்டு முதலீட்டு தொகைக்கு வருமான வரிச் சலுகையும் பெறலாம்.

இருப்பினும், வரிச் சலுகை பெறுவதற்கான தகுதி, தேர்ந்தெடுக்கப்பட்ட வரி முறையை பொறுத்து மாறுபடும்.
60 வயது நிறைவடைந்தவர்கள் இந்தத் திட்டத்தில் முதலீடு செய்யலாம். சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு, 55 முதல் 60 வயதுக்குள் உள்ள ஓய்வுபெற்ற ஊழியர்களும் முதலீடு செய்ய அனுமதிக்கப்படுகிறார்கள்.
இந்தத் திட்டத்தின் முதிர்வுக் காலம் 5 ஆண்டுகள் ஆகும். தேவைப்பட்டால், விதிமுறைகளுக்கு உட்பட்டு மேலும் நீட்டிக்கவும் வாய்ப்புள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |