போஸ்ட் ஆபிஸ் திட்டம்.., ஆண்டுக்கு வட்டி மட்டுமே ரூ.2,46,000 கிடைக்கும்
Post office scss scheme- பாதுகாப்பான முதலீட்டையும், நிலையான வருமானத்தையும் விரும்புபவர்களுக்கு அஞ்சல் அலுவலக சேமிப்பு திட்டங்கள் உதவியாக உள்ளன.
அரசு ஆதரவுடன் செயல்படுத்தப்படும் இத்திட்டங்களில், குறைந்த தொகையில் முதலீடு செய்ய முடியும்.
இந்நிலையில், தபால் அலுவலகத்தின் மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம் (SCSS) மூலம் ஆண்டுக்கு ரூ.2.46 லட்சம் வரை வட்டி பெறலாம்.
இந்தத் திட்டத்தில் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் முதலீடு செய்யலாம்.

இதில் குறைந்தபட்சம் ரூ.1,000 முதல் அதிகபட்சம் ரூ.30 லட்சம் வரை முதலீடு செய்ய அனுமதி வழங்கப்படுகிறது.
இந்தத் திட்டத்துக்கு ஆண்டுக்கு 8.2% வட்டி வழங்கப்படுகிறது. ரூ.30 லட்சம் முதலீடு செய்தால், ஆண்டுக்கு ரூ.2,46,000 வட்டியாகக் கிடைக்கும்.
இந்தத் திட்டத்தின் முதலீட்டுக் காலம் 5 ஆண்டுகள் ஆகும். முதிர்வுக்குப் பிறகு, மேலும் 3 ஆண்டுகளுக்கு முதலீட்டைப் புதுப்பித்துக் கொள்ளலாம்.

இந்தத் திட்டத்தில் மாதந்தோறும் வட்டி வழங்கப்படுவதில்லை. மூன்று மாதங்களுக்கு ஒருமுறை வட்டி வழங்கப்படுகிறது.
மார்ச் 31, ஜூன் 30, செப்டம்பர் 30 மற்றும் டிசம்பர் 31 ஆகிய தேதிகளில் வட்டி கணக்கிடப்படுகிறது.
இந்தத் தொகை ஏப்ரல் 1, ஜூலை 1, அக்டோபர் 1 மற்றும் ஜனவரி 1 ஆகிய தேதிகளில் தபால் அலுவலக சேமிப்புக் கணக்கில் வரவு வைக்கப்படுகிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |