மூத்த குடிமக்களுக்கு சிறந்த ஆஃபர் - ரூ.1,000 முதலீடு செய்தால், மாதம் ரூ.20,500 பெறலாம்
இந்திய அஞ்சல் துறை ஒரு சிறப்புத் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.
அஞ்சல் துறை
அதன்படி ஓய்வுக்கு பிறகும் நீங்கள் ஒரு நிலையான வருமான ஆதாரத்தைப் பெற முடியும். அதுதான் அஞ்சல் அலுவலகத்தின் மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம் (Senior Citizen Scheme).

இது 8.2 சதவீத வட்டியை வழங்குகிறது. இந்த வட்டி ஒவ்வொரு காலாண்டிலும் கணக்கில் வரவு வைக்கப்படுகிறது. இந்தத் திட்டத்தின் மூலம், ஒவ்வொரு மூன்று மாதங்களுக்கும் ரூ.61,500 வட்டியாகப் பெறலாம். இதன் மூலம், ஒவ்வொரு மாதமும் ரூ.20,500 வரை சம்பாதிக்க முடியும்.
மூத்த குடிமக்கள்
தவிர வருமான வரி சட்டத்தின் பிரிவு 80C-இன் கீழ் ரூ.1.5 லட்சம் வரை வரி சலுகையும் கிடைக்கிறது. ரூ.30 லட்சம் வரை முதலீடு செய்யலாம். ரூ.1000 முதலீட்டில் ஒரு அக்கவுண்ட்டை தொடங்கலாம். இந்தத் திட்டத்தில் நீங்கள் ரூ.30 லட்சம் முதலீடு செய்தால், 8.2 சதவீத வட்டி விகிதத்தில் ஆண்டுக்கு ரூ.2,46,000 வட்டியாகப் பெறுவீர்கள்.

ரூ.30 லட்சம் முதலீடு செய்து, ஒவ்வொரு காலாண்டிலும் வட்டியை எடுக்காமலேயே இருந்தால் 5 ஆண்டுகளுக்குப் பிறகு உங்களுக்கு ரூ.42 லட்சம் கிடைக்கும். 60 வயது அல்லது அதற்கு மேற்பட்டவர்கள், விருப்ப ஓய்வு பெற்று, 55 முதல் 60 வயதுக்குட்பட்டவர்கள்,
50 முதல் 60 வயதுக்குட்பட்ட ஓய்வுபெற்ற பாதுகாப்புப் படை வீரர்கள் இந்தத் திட்டத்தில் முதலீடு செய்யலாம். நிலையான, காலாண்டு வருமானத்தையும் வரிச் சலுகைகளையும் வழங்குவதால், இது ஒரு பிரபலமான ஓய்வூதிய முதலீட்டுத் தேர்வாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.