வட்டி மட்டும் ரூ.18 லட்சம் கிடைக்கும்.., அஞ்சலகத்தின் அருமையான திட்டம்
தபால் அலுவலகத்தின் பொது வருங்கால வைப்பு நிதி (PPF) திட்டம் பாதுகாப்பான முதலீட்டாகவும், நல்ல வருமானத்தை வழங்கும் திட்டமாகவும் உள்ளது.
நீண்டகால முதலீடான இந்த திட்டத்தில் தற்போது ஆண்டுக்கு 7.1% வட்டி வழங்கப்படுகிறது. இந்த வட்டி மற்றும் முதிர்வு தொகை முழுவதும் வரி விலக்கு பெறுகிறது.
PPF கணக்கை ரூ.500 முதலீட்டில் தொடங்கி ஆண்டுக்கு அதிகபட்சமாக ரூ.1.5 லட்சம் வரை முதலீடு செய்யலாம்.

இத்திட்டத்தில் மைனர்களுக்குப் பாதுகாவலர் மூலம் கணக்கு திறக்கலாம். ஆனால் கூட்டுக் கணக்குக்கு அனுமதி இல்லை.
இந்த திட்டத்தில் வருமான வரி சட்டத்தின் 80C பிரிவின் கீழ் ரூ.1.5 லட்சம் வரை வரி சலுகை கிடைக்கும். இது EEE வகையைச் சேர்ந்தது.
ஒருவர் ஆண்டுக்கு ரூ.1.5 லட்சம் வீதம் 15 ஆண்டுகள் முதலீடு செய்தால், மொத்த முதலீடு ரூ.22.5 லட்சமாகும்.

15 ஆண்டுகளின் முடிவில் சுமார் ரூ.40.68 லட்சம் கிடைக்கும். இதில் ரூ.18 லட்சத்திற்கும் மேல் வட்டி வருமானமாக இருக்கும்.
இதனைதொடரந்து, 15 ஆண்டுகளுக்கு பிறகு 5 ஆண்டுகள் நீட்டித்தால், தொகை சுமார் ரூ.66.58 லட்சமாக அதிகரிக்கும்.
மேலும், மொத்தம் 25 ஆண்டுகள் வரை நீட்டித்தால் மொத்த நிதி 1.03 கோடி ரூபாய்க்கு மேல், மொத்த வட்டி சுமார் 65.58 லட்சம் ரூபாய், மொத்த முதலீடு 37.50 லட்சம் ரூபாய் ஆகும்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |