ரூ.1 லட்சம் முதலீடு.., 2 வருடங்களில் எவ்வளவு வருமானம் கிடைக்கும்?
இந்திய அஞ்சலகங்கள் முதலீட்டாளர்களுக்கு உத்தரவாதமான வருமானத்தை வழங்கும் பல்வேறு சிறு சேமிப்புத் திட்டங்களை வழங்குகிறது.
அதன்படி, நீண்டகால சேமிப்புக்கு பாதுகாப்பான முதலீட்டு திட்டங்களை பலரும் விரும்புகின்றனர்.
அந்தவகையில், போஸ்ட் ஆபிஸ் நேர வைப்புத் திட்டம் முதலீட்டாளர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.

போஸ்ட் ஆபிஸின் இந்த நேர வைப்புத் இந்த திட்டத்தில் 1 ஆண்டு முதல் 5 ஆண்டுகள் வரை முதலீடு செய்யலாம்.
குறிப்பிட்ட காலத்திற்கு உத்தரவாதமான வருமானம் கிடைப்பதால், இது பாதுகாப்பான சேமிப்பு திட்டமாக கருதப்படுகிறது.
தற்போது 1 ஆண்டு வைப்புக்கு 6.9%, 2 ஆண்டுகளுக்கு 7.0%, 3 ஆண்டுகளுக்கு 7.1% மற்றும் 5 ஆண்டுகளுக்கு 7.5% வட்டி வழங்கப்படுகிறது.
இந்த திட்டத்தில் குறைந்தபட்சம் ரூ.1,000 முதலீடு செய்யலாம். மேலும், அதிகபட்ச முதலீட்டு வரம்பு எதுவும் இல்லை.
உதாரணமாக, 2 ஆண்டுகளுக்கு ரூ.1 லட்சம் முதலீடு செய்தால், கால அவதி முடிவில் சுமார் ரூ.1,14,888 கிடைக்கும்.
இந்த திட்டத்தில் வட்டி மட்டும் ரூ.14,888 கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது.
இந்நிலையில், இந்தத் திட்டத்தில் முதலீடு செய்பவர்கள் உறுதியான மற்றும் அபாயம் இல்லாத வருமானத்தைப் பெறுகிறார்கள்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |