போஸ்ட் ஆபீஸ்: ரூ.3,00,000 முதலீடு.., 3 ஆண்டுகளுக்கு பின் எவ்வளவு கிடைக்கும்?
பொதுவாக, பாதுகாப்பான முதலீட்டை விரும்புபவர்களின் முதல் தேர்வாக தபால் நிலைய சேமிப்பு திட்டங்கள் உள்ளன.
அந்தவகையில், பாதுகாப்பான முதலீட்டை விரும்புபவர்களுக்கு போஸ்ட் ஆபிஸ் டைம் டெபாசிட் (Time Deposit) நல்ல தேர்வாக உள்ளது.
அரசு ஆதரவு பெற்ற இத்திட்டம் பாதுகாப்பான மற்றும் நிலையான வருமானம் தேடுபவர்களுக்கு சிறந்த முதலீட்டு வாய்ப்பாக உள்ளது.
இந்த திட்டத்தில் 1, 2, 3 அல்லது 5 ஆண்டுகள் காலத்திற்கு முதலீடு செய்யலாம்.

மேலும், போஸ்ட் ஆபிஸின் இந்த டைம் டெபாசிட் திட்டத்தின் முதலீடு குறைந்தபட்ச ரூ.1,000, அதிகபட்ச முதலீட்டு வரம்பு இல்லை.
வயது வித்தியாசம் இல்லாமல் இந்த திட்டத்தில் அனைவருக்கும் ஒரே வட்டி விகிதம் வழங்கப்படுகிறது.
அதன்படி, தற்போதைய வட்டி விகிதங்கள் 1 ஆண்டுக்கு 6.9%, 2 ஆண்டுக்கு 7.0%, 3 ஆண்டுக்கு 7.1%, 5 ஆண்டுக்கு 7.5% வழங்கப்படுகிறது.
உதாரணமாக, 3 ஆண்டுகளுக்கு ரூ.3 லட்சம் முதலீடு செய்தால் 7.1% வட்டியில் சுமார் ரூ.70,551 வட்டி கிடைக்கும்.
3 ஆண்டுகள் முடிவில் அசல் தொகை ரூ.3 லட்சத்துடன் வட்டியாக கிடைக்கும் ரூ.70,551 சேர்த்து மொத்தம் ரூ.3,70,551 பெறலாம்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |