Post office: ரூ.7 லட்சம் முதலீடு.., 5 ஆண்டுகளில் எவ்வளவு வருமானம் கிடைக்கும்?
இந்த காலத்தில் சம்பாதிக்கும் பணத்தை பாதுகாப்பாக எதில் முதலீடு செய்வது என்ற குழப்பம் பலருக்கும் உள்ளது.
அதற்கான ஒரு நல்ல தீர்வாக போஸ்ட் ஆபீஸ் டைம் டெபாசிட் (TD) திட்டம் உள்ளது.
இது வங்கிகளில் உள்ள FD போல செயல்படும் பாதுகாப்பான முதலீட்டு திட்டம். இந்த திட்டத்தில் முதலீடு செய்தால், நிலையான வட்டி கிடைக்கும்.

நடுத்தர குடும்பங்கள், மூத்த குடிமக்கள் மற்றும் பாதுகாப்பான வருமானம் விரும்புபவர்கள் இதை தேர்வு செய்யலாம்.
1 ஆண்டு முதல் 5 ஆண்டுகள் வரை கால அளவில் முதலீடு செய்யலாம். தற்போது சுமார் 6.90% முதல் 7.50% வரை வட்டி வழங்கப்படுகிறது.
உதாரணமாக, 7,00,000 ரூபாயை 5 ஆண்டுகளுக்கு 7.50% வட்டியில் முதலீடு செய்தால், காலாவதியில் சுமார் ரூ.10,14,964 கிடைக்கும். இதில் ரூ.3,14,964 வரை வட்டி வருமானமாக கிடைக்கும்.
இந்த திட்டத்தில் குறைந்தபட்சம் ரூ.1000 முதலீடு செய்யலாம். அதிகபட்ச வரம்பு இல்லை.

5 ஆண்டு திட்டத்திற்கு வருமான வரி சட்டத்தின் பிரிவு 80C கீழ் ரூ.1.5 லட்சம் வரை வரி விலக்கு கிடைக்கும்.
இந்த திட்டத்தில் ஒருவரே அல்லாமல், மூன்று பேர்வரை சேர்ந்து கூட்டு கணக்காகவும் தொடங்கலாம்.
10 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகள் தங்களின் பெயரில் கணக்கு தொடங்கலாம். 10 வயதுக்கு குறைவானவர்களுக்கு பெற்றோர் அல்லது பாதுகாவலர் கணக்கை நடத்தலாம்.
மொத்தத்தில், பாதுகாப்பான முதலீடு மற்றும் நிலையான வருமானம் தேடுபவர்களுக்கு இது ஒரு சிறந்த தேர்வாகும்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |