ஏசி கெட்டுப்போக சுற்றுப்புறமும் ஒரு காரணமா? வியப்பை ஏற்படுத்தியுள்ள ஒரு செய்தி
40,000 ரூபாய் கொடுத்து வாங்கிய ஏசி பழுதானதால் மெக்கானிக் ஒருவரை அழைத்துள்ளார் ஒருவர்.
வழக்கமாக, சார், கம்ப்ரெஸர் போய்விட்டது, அது பழுது, இது பழுது எனக்கூறி ஆயிரக்கணக்கில் பணம் வாங்கிச் செல்வார்களாம் மெக்கானிக்குகள்.
ஆனால், இம்முறை வந்த மெக்கானிக், ஒரு வித்தியாசமான விடயத்தைக் கூறியுள்ளார்.
பெண்ணொருவர் அந்த விடயம் குறித்து பகிர்ந்துள்ள இடுகை ஒன்று வைரலாகிவருகிறது.
40,000 ரூபாய் கொடுத்து வாங்கிய ஏசி பழுது
கோடை வந்துவிட்டாலே என் அலுவலக ஏசியில் ஏதாவது பிரச்சினை வந்துவிடும் என்று கூறும் அந்த நபர், வழக்கம்போல மெக்கானிக் ஒருவரை அழைத்துள்ளார்.
வழக்கமாக, எதையாவது சொல்லி ஆயிரக்கணக்கில் பணம் வாங்கிவிட்டு பழுதுபார்த்துவிட்டுச் செல்வார்களாம் மெக்கானிக்குகள்.
ஆனால், இம்முறை வந்த மெக்கானிக்கோ, அறைக்கு வெளியே பொருத்தப்பட்டுள்ள ஏசியின் Outdoor Unit (ODU) என்னும் பகுதியை பரிசோதித்துள்ளார்.

பின்னர் சிரித்தவாறே, சார், உங்கள் ஏசியில் பிரச்சினை ஒன்றும் இல்லை, அது பொருத்தப்பட்டுள்ள இடம்தான் பிரச்சினை என்றாராம் அந்த மெக்கானிக்.
அதாவது, அந்த அலுவலகத்தில் ஏசியின் ODU பொருத்தப்பட்டுள்ள இடத்துக்குக் கீழே, ட்ரெய்னேஜ் அமைப்பு உள்ளது.
அந்த ட்ரெய்னேஜிலிருந்து வெளியாகும் அம்மோனியா, ஹைட்ரஜன் சல்பைடு போன்ற வாயுக்கள் காற்றில் கலந்து, ஏசியின் கண்டென்சரையும் காப்பர் குழாய்களையும் அரித்துள்ளன.
காற்றிலுள்ள ஈரமும் அத்துடன் சேர்ந்துகொள்ள, குழாய்கள் துருப்பிடிக்கத் துவங்கியுள்ளன.
விளைவு, கூலிங் குறைவு, வாயுக் கசிவு, தொடர்ந்து பணச் செலவு!
ஆக, பிரச்சினை ஏசியில் இல்லை, அது பொருத்தப்பட்டுள்ள இடத்தில்தான் என்பதை புரிந்துகொண்டேன் என்று கூறியுள்ளார் அவர்.
40,000 AC or just scrap? Turns out location changed everything! 😱💔
— sona (@sonali0_) May 29, 2026
I used to think my AC was “unlucky.” Every March, a new drama began.
Sometimes gas leakage, sometimes zero cooling. The mechanic would come, charge thousands, and say—
“Brother, the compressor is also giving up… pic.twitter.com/F4ePpvbFn0
இந்த செய்தியை சமூக ஊடகமான எக்ஸில் சோனா என்னும் பெண் பகிர, அந்த இடுகை வைரலாகிவருகிறது. என்ன? ஏசி பொருத்தும் இடத்தால் பிரச்சினையா, இது இவ்வளவு காலமாக தெரியாமல் போய்விட்டதே என்னும் ரீதியில் கருத்துக்களை பகிர்ந்துவருகிறார்கள் பலரும்!
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |