இந்தியர்களை புகைப்படம் எடுக்கமுடியாது! அவுஸ்திரேலியாவில் இப்படியும் ஒரு இனவெறி தாக்குதல்
அவுஸ்திரேலியாவில் இப்படியும் இனவெறி தாக்குதல் நடத்தமுடியும் என இந்தியர்களை புண்படுத்தும் விதமாக போஸ்டர் ஒன்றை ஒட்டியுள்ளனர்.
இனவெறி போஸ்டர்
அவுஸ்திரேலியாவின் அடிலெய்டு நகரத்தில், Rundle மாலில் உள்ள அவுஸ்திரேலிய தபால் நிலையத்திற்கு வெளியே இனவெறி கொண்டதாகத் தோன்றும் போஸ்டர் ஒன்று சர்ச்சையைத் தூண்டியது மற்றும் இந்திய சமூகத்திலிருந்து பின்னடைவை ஏற்படுத்தியது.
இது குறித்து பரவலான விமர்சனங்களைத் தொடர்ந்து, அவுஸ்திரேலியா போஸ்ட் மன்னிப்புக் கேட்டு, விரைவில் அந்த போஸ்டரை அகற்றுவதாக தெரிவித்தது.
இந்திய புகைப்படங்களை எடுக்க முடியாது
சர்ச்சைக்குரிய அந்த போஸ்டரில், பாரிய தடிமனான எழுத்துக்களில், "எங்கள் ஒளி மற்றும் புகைப்பட பின்னணியின் தரம் காரணமாக, துரதிர்ஷ்டவசமாக எங்களால் இந்திய புகைப்படங்களை எடுக்க முடியாது" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இது குறிப்பாக அடிலெய்டில் உள்ள இந்திய சமூகத்தினரால் ஒரு வகையான இனவெறி தாக்குதலை ஏற்றுக்கொள்ளமுடியவில்லை. பல உள்ளூர் சமூக தலைவர்கள் மற்றும் அரசியல்வாதிகள் இதனை கண்டித்து, போஸ்டரை அகற்றுமாறு கேட்டுக்கொண்டுள்ளனர்.
கண்டனம்
இதையடுத்து, அவுஸ்திரேலியாவின் தகவல் தொடர்பு அமைச்சரும், கிரீன்வேக்கான ஃபெடரல் லேபர் உறுப்பினர் மற்றும் NSW தொழிலாளர் கட்சியின் தலைவருமான Michelle Rowland, Australian Post-க்கு கண்டனம் தெரிவித்து கடிதம் எழுதியுள்ளார்.
Either this is a deliberate systemic racial jibe or everyone in the country needs to show a score of 8 bands in IELTS before taking up any job.@auspost #auspost pic.twitter.com/QA5bbLmzCc
— pranab pai (@pranabpai77) November 17, 2022
South Australian Chapter Vishva Hindu Parishad அமைப்பின் தலைவரான ராஜேந்திர பாண்டே, "அவர்கள் உண்மையில் என் நிறத்தைப் பற்றி பேசுகிறார்கள் என்று நான் நினைத்தேன், நான் அதை தனிப்பட்ட முறையில் எடுத்துக் கொண்டேன், பலருக்கும் அப்படிதான் இருந்திருக்கும்" என்று கூறியுள்ளார்.
Australian Post மன்னிப்பு
இந்நிலையில், மன்னிப்புக் கோரியுள்ள Australian Post விரைவில் அந்த போஸ்டரை அகற்றுவதாகக் கூறியது. தபால் அலுவலகம் வழங்கிய பல வாடிக்கையாளர்களின் புகைப்படங்களை இந்திய துணைத் தூதரகம் முன்பு நிராகரித்ததாகக் கூறி, இந்த சம்பவம் தொடர்பில் Australian Post ஒரு விளக்கத்தையும் வெளியிட்டது.