ஜெனீவாவில் ஒட்டப்பட்ட இந்தியாவைக் குறித்த போஸ்டர்கள்: சுவிஸ் தூதருக்கு சம்மன்
ஜெனீவாவில் இந்தியாவை அவமதிக்கும் வகையில் அவதூறு செய்திகள் கொண்ட போஸ்டர்கள் ஒட்டப்பட்ட விடயம் இணையத்தில் வைரலானது.
சுவிஸ் தூதருக்கு சம்மன்
சுவிட்சர்லாந்தில் ஜெனீவாவிலுள்ள ஐக்கிய நாடுகள் அலுவலகத்தின் வெளியே, இந்தியாவை அவமதிக்கும் வகையில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தன.
இந்தியாவில் பெண்கள், சிறுபான்மை மதத்தினர் மற்றும் சில சமூகக் குழுக்கள் துன்புறுத்தப்படுவதாக அந்த போஸ்டர்களில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த விடயம் இணையத்தில் வைரலானதைத் தொடர்ந்து, இந்தியாவுக்கான சுவிஸ் தூதருக்கு இந்திய வெளிவிவகாரங்கள் அமைச்சகம் சம்மன் அனுப்பியது.
இந்தியாவுக்கான சுவிஸ் தூதரான Ralf Hecknerஇடம் இதுகுறித்து இந்தியா கவலை தெரிவித்த நிலையில், இந்த விடயத்தின் தீவிரத்தன்மை குறித்து சுவிஸ் அதிகாரிகளிடம் தெரிவிக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
இணையத்தில் அந்த போஸ்டர்கள் வைரலானதைத் தொடர்ந்து, இந்தியர்கள் தரப்பில் அதற்கு பெருமளவில் கண்டனம் எழுந்தது குறிப்பிடத்தக்கது.
Image: Twitter