முகத்தில் சுருக்கம் விழுவதை தள்ளிபோடணுமா? இவற்றை பின்பற்றினாலே போதும்
beauty tips
wrinkles
By Kishanthini
வயது ஏற ஏற முகத்தில் சுருக்கம் ஏற்படுவது இயற்கை. ஆனால், நாம் சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டால், முக சுருக்கத்தை சில வருடங்களுக்குத் தள்ளிப்போடலாம்.
இன்று சந்தையில் கிடைக்கும் பல தயாரிப்புகள், உங்கள் முகத்திற்கு பக்கவிளைவுகளை ஏற்படுத்தாலாம். இந்த தயாரிப்புகளில் பல தீங்கு விளைவிக்கும் இரசாயனங்கள் உள்ளன.
இதற்கு பதிலாக இயற்கை பொருட்களை கொண்டு கூட முகச்சுருக்கத்தை மறைத்து உங்கள் சருமத்தை இளமையாக்கலாம். தற்போது அவை என்னென்ன என்பதை பார்ப்போம்.
- ஒரு கப் துளசி இலைகளை சிறிது நீரில் ஊறவைத்து மென்மையாக பேஸ்ட் பதத்துக்கு அரைத்து எடுக்கவும். 1 டீஸ்பூன் அளவு கடலை மாவு, 1 டீஸ்பூன் தேன் சேர்த்து நன்றாக கலக்கவும். இதை முகத்தில் தடவி உலரவிடவும். பிறகு மந்தமான நீரில் கழுவி எடுக்கவும்.
-
அஸ்வகந்தாவை வாங்கி அரை டீஸ்பூன் அளவு எடுத்து அதில் இஞ்சித்தூள் கால் டீஸ்பூன், எலுமிச்சை சாறு கால் டீஸ்பூன் (நீர் சேர்த்து) சேர்த்து அனைத்தையும் நன்றாக கலந்து பேஸ்ட் செய்ய வேண்டும். இது தளர இருக்கட்டும். இதை முகம் எங்கும் தடவி உலரவிடவும். இதை தண்ணீரில் கழுவி எடுக்கவும்.
-
மஞ்சள் தூள் அரை டீஸ்பூன் அளவு எடுத்து 1 டீஸ்பூன் தேன் கொண்டு, 1 துளி எலுமிச்சை எசென்ஷியல் ஆயில் சேர்க்கவும். அனைத்தையும் நன்றாக கலந்து ஃபேஸ் மாஸ்க் போட்டு 15 நிமிடங்கள் கழித்து மசாஜ் செய்யவும். பிறகு 10 நிமிடங்கள் கழித்து காய்ந்த பிறகு முகத்தை கழுவி எடுக்கவும்.
-
பட்டையை பொடியாக்கி 1 டீஸ்பூன் அளவு எடுத்து அதில் 1 டீஸ்பூன் அளவு தேனை கலந்து இரண்டையும் நன்றாக கலக்கி எடுக்கவும். பிறகு முகத்தில் தடவி 15 நிமிடங்கள் வரை வைத்திருந்து மந்தமான நீரில் கழுவி எடுக்கவும்.
-
தேங்காய் எண்ணெய் 1 டீஸ்பூன் அளவு எடுத்து அதில் 3 அல்லது 4 சொட்டு கிராம்பு எண்ணெய் கலந்து முகத்தை சுத்தம் செய்த பிறகு முகத்தில் தடவி மசாஜ் செய்யுங்கள். பிறகு 10 நிமிடங்கள் கழித்து முகத்தை குளிர்ந்த நீரில் கழுவி எடுங்கள். நீராவி பிடிக்கும் போது கிராம்பு எண்ணெய் கலந்தும் கூட பிடிக்கலாம்.
-
இஞ்சியை தோல் நீக்கி சுத்தம் செய்து அரைத்து பேஸ்ட் ஆக்குங்கள். இது கால் டீஸ்பூனில் பாதி அளவு போதும். பிறகு அதில் 4 டீஸ்பூன் நாட்டு சர்க்கரை, 2 டீஸ்பூன் ஆலிவ் எண்ணெய் கலந்து நன்றாக பேஸ்ட் பதத்துக்கு குழைத்து விடுங்கள். இந்த கலவையுடன் முகத்தை 10 நிமிடங்கள் துடைத்து விடுங்கள். பிறகு மீண்டும் இலேசாக வட்ட வடிவில் மசாஜ் செய்து விடுங்கள். பிறகு மந்தமான நீரில் கழுவி எடுங்கள். இது வயதான அறிகுறிகளை தடுக்க உதவுகின்றன.
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US