ஒத்திவைக்கப்பட்ட பிரித்தானிய ஐரோப்பிய ஒன்றிய உச்சி மாநாடு: அடுத்து என்ன?
பிரித்தானியாவின் பிரதமராக இருந்த சர் கெய்ர் ஸ்டார்மர் ஐரோப்பிய ஒன்றியத்துடன் நெருக்கம் காட்டிவந்தது அனைவரும் அறிந்ததே.
இம்மாதம், அதாவது, ஜூலை மாதம் 22ஆம் திகதி, பிரித்தானிய ஐரோப்பிய ஒன்றிய உச்சி மாநாடு ஒன்று நடைபெற இருந்த நிலையில், ஸ்டார்மர் ராஜினாமா செய்ததால், அந்த மாநாடு ஒத்திவைக்கப்பட்டது.
அடுத்து என்ன?
அந்த உச்சி மாநாடு மீண்டும் இன்னொரு திகதியில் நடத்தப்படும் என தற்போது தகவல் வெளியாகியுள்ளது.

அத்துடன், பிரித்தானியாவின் ஐரோப்பிய உறவுகள் அமைச்சராக ஹாமிஷ் ஃபால்கோனர் (Hamish Falconer) என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஆகவே, பிரித்தானிய ஐரோப்பிய ஒன்றிய உச்சி மாநாட்டை நடத்துவதற்கான திகதியை முடிவு செய்வது குறித்து பேச்சுவார்த்தைகள் நடத்தும் பொறுப்பு ஃபால்கோனருடையதாகியுள்ளது.
இதற்கிடையில், திங்கட்கிழமையன்று பிரித்தானியாவின் புதிய பிரதமரான ஆன்டி பர்னாமும், ஐரோப்பிய ஆணைய தலைவரான உர்சுலா வான் டெர் லேயனும் தொலைபேசி வாயிலாக பேசிக்கொண்ட நிலையில், பிரித்தானிய ஐரோப்பிய ஒன்றிய உச்சி மாநாட்டை இந்த ஆண்டின் இறுதி வாக்கில் நடத்துவது தொடர்பில் இருதரப்பும் இணைந்து செயலாற்ற ஒப்புக்கொண்டுள்ளதாக பிரதமர் இல்ல வட்டாரம் தெரிவித்துள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |