நாவில் எச்சில் ஊற வைக்கும் இந்த காய்கறியை இவங்க மட்டும் கனவுல கூட நினைச்சு பார்க்கக்கூடாதாம்!
உருளைக்கிழங்கு அனைவருக்கும் பிடித்த காய்கறியாகும், பல வகைகளில் இதை வைத்து உணவுகள் சமைக்கலாம்.
உருளைக்கிழங்கில் ஏராளமான சத்துக்கள் இருந்தாலும் நாம் உருளைக்கிழங்கை சாப்பிடக் கூடாது என்பதற்கு ஏராளமான காரணங்களும் உள்ளன.
உடல் எடை
ஹார்வர்ட் ஆராய்ச்சியாளர்கள் 12 ஆண்டுகளில் 120,000 பங்கேற்பாளர்களைக் கொண்டு ஒரு பெரிய ஆராய்ச்சியை நடத்தியது. அதன் படி உருளைக்கிழங்கை அதிகமாக சாப்பிட்டவர்கள் 1.3 பவுண்ட் எடை அதிகமாக பெற்று இருப்பது தெரிய வந்தது.
புற்றுநோய் அபாயம்
வறுத்த உருளைக்கிழங்கை அநேகமாக எல்லோரும் விரும்பி சாப்பிடுவோம். அதிக வெப்பநிலையில் உருளைக்கிழங்கை பொரிக்கும் போது , அது அக்ரிலாமைடு என்ற வேதிப்பொருளை உருவாக்குகிறது.இந்த பொருள் புற்றுநோய் அபாயத்தை அதிகரிக்கிறது. வறுத்த உருளைக்கிழங்கை வாரத்திற்கு இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட முறை சாப்பிடுவோர் வறுத்த உருளைக்கிழங்கு சாப்பிடாதவர்களுடன் ஒப்பிடும்போது இறப்பதற்கான வாய்ப்பை இரட்டிப்பாக்குவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
இரத்த சர்க்கரை
கிளைசெமிக் குறியீட்டில் உருளைக்கிழங்கு விகிதம் அதிகமாக உள்ளது. இது கார்போஹைட்ரேட் உணவு என்பதால் இரத்த சர்க்கரை அளவை வேகமாக கூட்டுகிறது. உருளைக்கிழங்கை விரைவாக ஜீரணிக்கவும், இரத்த சர்க்கரை மற்றும் இன்சுலின் அளவைக் குறைக்கவும் வல்லுநர்கள் பரிந்துரைக்கின்றனர்.இது அதிகப்படியான உணவு, நீரிழிவு, இதய நோய் மற்றும் உடல் பருமன் அபாயத்தை அதிகரிக்கும். இந்த விளைவைக் குறைப்பதற்கான ஒரே வழி, மெலிந்த புரதத்தின் உணவுடன் உருளைக்கிழங்கை சாப்பிடுவது உங்கள் இரத்த ஓட்டத்தில் சர்க்கரையை வெளியிடுவதை கட்டுப்படுத்தலாம்.
அதிகம் சாப்பிட தூண்டும்
உருளைக்கிழங்கு சிப்ஸ்கள், பிரஞ்சு ப்ரை போன்ற உணவுகள் ஒரு போதை தரும் உணவுகள். இந்த உணவுகள் சாப்பிடுவதை கட்டுப்படுத்துவது கடினம். இதை அடிக்கடி சாப்பிட்டுக்கிட்டே இருக்க வேண்டும் என்று தோன்றக்கூடியது. எனவே உருளைக்கிழங்கு உணவுகளை தவிர்க்க முடியவில்லை என்றால் அளவுடன் எடுத்துக் கொள்ளுங்கள். இதய பிரச்சனை, இரத்த அழுத்த பிரச்சனை இருப்பவர்கள் இதை தவிர்ப்பது நலம்.