முகப்பருக்களை நிரந்தரமாக நீக்க இந்த ஒரு பொருள் போதும்: எப்படி பயன்படுத்துவது?
பல பெண்களுக்கு இருக்கும் பொதுவான பிரச்சனை என்றால் அது முகப்பரு தான்.
என்னதான் நம் முகம் வெள்ளையாகவும் பொலிவாகவும் இருந்தாலும் முகப்பரு நம் முகத்தையே கெடுத்துவிடுகிறது.
அந்தவகையில், முகப்பருக்களை நிரந்தரமாக நீக்க உருளைக்கிழங்கை எப்படி பயன்படுத்துவது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- உருளைக்கிழங்கு- 1
- தேன்- 1 ஸ்பூன்
- தயிர்- 2 ஸ்பூன்
- வைட்டமின் ஈ காப்ஸ்யூல்கள்- 2
பயன்படுத்தும் முறை
முதலில் உருளைக்கிழங்கை தோல் சீவி ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து நன்கு அரைத்து எடுத்துக்கொள்ளவும்.
பின் இதனை ஒரு கிண்ணத்தில் மாற்றி அதில் தயிர் மற்றும் தேன் சேர்த்து கலந்துகொள்ளவும்.
அடுத்து அதில் வைட்டமின் ஈ காப்ஸ்யூல்கள் சேர்த்து பேஸ்ட்டை நன்றாக கலந்து சிறிது நேரம் அப்படியே வைத்திருக்க வேண்டும்.
அதன்பிறகு முகத்தை நன்கு கழுவி இந்த ஸ்க்ரப்பை முகத்தில் தடவி 25 நிமிடங்கள் அப்படியே வைக்கவும்.
பிறகு முகத்தை லேசாக கைகளால் மசாஜ் செய்யவும். இதனை வாரத்திற்கு ஒரு முறை பயன்படுத்தி வர முகப்பருக்கள் நிரந்தமாக நீங்கும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |