இங்கிலாந்தில் புயலால் அறுந்து விழுந்த மின்கம்பி... 13 செல்லப்பிராணிகளுக்கு நேர்ந்த பரிதாபம்
பிரித்தானியாவில் பல பகுதிகளை புயல் ஒன்று தாக்கிய நிலையில், இங்கிலாந்தில் பலத்த காற்று காரணமாக மரம் ஒன்று முறிந்துவிழுந்துள்ளது.
முறிந்த மரம் மின்கம்பியின் மீது விழுந்ததில் கம்பி அறுந்து கீழே விழ, அந்த இடத்தில் நாய்கள் பல கூண்டுகளில் அடைத்து வைக்கப்பட்டிருக்கின்றன.
மின்கம்பி வழியாக மின்சாரம் பாய்ந்ததில், அந்த கூண்டுகளில் இருந்த 13 நாய்களும் மின்சாரம் தாக்கி உயிரிழந்துவிட்டன.
இந்த துயர சம்பவம் இங்கிலாந்திலுள்ள Ampleforth என்ற இடத்தில் நிகழ்ந்துள்ளது.
உயிரிழந்த நாய்களில் சில, பிறந்து ஏழு மாதங்களே ஆன குட்டிகளாகும்.
தகவலறிந்து வந்த மின்துறை ஊழியர்கள் அந்த பகுதியில் மின்சாரத்தைத் துண்டித்துள்ளனர்.
நடந்த இந்த துயர சம்பவம், ஏற்கனவே அடித்த Dudley என்னும் புயலின் பாதிப்பு ஆகும். இதற்கிடையில், இன்று Eunice என்னும் மற்றொரு புயல் பிரித்தானியாவின் பல பகுதிகளைத் தாக்க உள்ளதாக வானிலை ஆராய்ச்சி மையம் எச்சரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.