கடுமையான விதிகள்... லொட்டறியில் 1.82 பில்லியன் டொலர் பரிசாக வென்றவர் பரிதவிப்பு
கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு முந்தைய நாள் Powerball லொட்டறியில் 1.82 பில்லியன் டொலர் பரிசாக வென்றவர், இன்னும் சில நாட்கள் காத்திருக்க வேண்டும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
இரகசியமாக வைத்திருக்க வேண்டும்
அமெரிக்காவின் ஆர்கன்சாஸ் மாகாணத்தில் விடுமுறை நாட்கள் நீட்டிக்கப்பட்டுள்ளதால், திங்கட்கிழமை வரையில் அந்த நபர் தமக்கான தொகையைக் கோர முடியாது. அதாவது வெற்றியாளராக அறிவிக்கப்பட்டு ஐந்து நாட்கள் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

மாகாண விதிகளின் அடிப்படையில், லொட்டறி வெற்றியாளருக்கு, 180 நாட்கள் கால அவகாசம் அளிக்கப்படுகிறது. இந்த 180 நாட்களில் எப்போது வேண்டுமானாலும் உரிமை கோரலாம்.
மேலும், ஆர்கன்சாஸ் மாகாண விதிகளின் அடிப்படையில், 500,000 டொலருக்கும் அதிகமானத் தொகையை ஒருவர் பரிசாக வென்றால், தங்கள் பரிசுத்தொகையைப் பெற்ற பிறகு மூன்று ஆண்டுகளுக்குத் தங்கள் அடையாளங்களை இரகசியமாக வைத்திருக்க வேண்டும்.
இதனால், வெற்றியாளரின் பெயர் உள்ளிட்ட தகவல்கள் எதுவும் 2028 ஆம் ஆண்டின் பிற்பகுதி வரை பொதுமக்களுக்குத் தெரியவர வாய்ப்பில்லை.
அமெரிக்காவிலேயே இரண்டாவது மிகப்பெரிய பவர்பால் பரிசை வென்ற அந்த டிக்கெட், ஆர்கன்சாஸ் மாகாணத்தின் கேபோட் நகரில் உள்ள மர்பி யுஎஸ்ஏ எரிபொருள் நிலையத்தில் விற்கப்பட்டது.

வரி செலுத்த வேண்டியதில்லை
பரிசாக வென்ற 1.82 பில்லியன் டொலர் தொகையை அடுத்த 30 ஆண்டுகளில், ஆண்டுக்கு ஒரு குறிப்பிட்ட தொகை என மொத்தமாக வாங்கலாம். அல்லது ஒரே முறையாக 834.9 மில்லியன் டொலர் எனவும் கைப்பற்றலாம், ஆனால் இதில் வரி செலுத்த நேரிடும்.
வெறும் 2 டொலருக்கான இந்த Powerball லொட்டறியில் ஒருவர் பில்லியன் டொலர் பரிசை வெல்வது என்பது மிக மிக அரிதென்றே கூறுகின்றனர்.
Powerball லொட்டறி அமெரிக்காவின் 45 மாகாணங்கள், கொலம்பியா மாவட்டம், புவேர்ட்டோ ரிக்கோ மற்றும் அமெரிக்க விர்ஜின் தீவுகளில் விற்கப்படுகின்றன; உள்ளூர் வரிச் சட்டங்களைப் பொறுத்து இறுதிப் பரிசுத் தொகைகள் பரவலாக வேறுபடுகின்றன.

ஆனால், கலிபோர்னியா, புளோரிடா, நியூ ஹாம்ப்ஷயர், தெற்கு டகோட்டா, டென்னசி, டெக்சாஸ், வாஷிங்டன் மற்றும் வயோமிங் ஆகிய மாகாணங்களில் ஜாக்பாட் வெற்றிகளுக்கு மாகாண வரிகள் செலுத்த வேண்டியதில்லை.
மேரிலாந்து, நியூயார்க், ஓரிகன், நியூ ஜெர்சி மற்றும் வாஷிங்டன், டி.சி. ஆகிய இடங்களில் வெற்றி பெற்றவர்கள் 8 சதவீதத்திற்கும் அதிகமான மாகாண வரி விகிதங்களை எதிர்கொள்கின்றனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |